Tuesday, September 18, 2012

005. நின்றியங்கும் ஒன்றல்ல (His nature is beyond comprehension)


நின்றியங்கு மொன்றலாவு ருக்கடோறும் ஆவியாய்
ஒன்றியுள்க லந்துநின்ற நின்னதன்மை யின்னதென்று
என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்நின் னுந்திவாய்
அன்றுநான்மு கற்பயந்த வாதிதேவ னல்லையே

பதம் பிரித்தது:

நின்று இயங்கும் ஒன்றல்ல உருக்கள்தொரும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறைந்த ஆதியாய் உன் உந்தி வாய்
அன்று நான்முகர் பயந்த ஆதி தேவன் அல்லையே?

பாசுரம் உச்சரிப்பு: (Play பொத்தானை சொடுக்கவும்)


Transliteration:

nindRiyangu mondralla urukkaLthOrum aaviyaay
ondriuL kalanthu nindra ninna thanmay innathendru
endrumyaarkkum eNNiraintha aathiyaayun unthivaay
andru naanmugaRp payantha aathithEvan allayyE?

Translation:


Neither the one who stays put nor the one who functions
A Pervading inner spirit -  a perplexing precursor- ever for all!
Primal Lord who once gave birth out of his navel 
the four-headed Lord of all creations!!

Recitation of the above verse: (click below)



பதவுரை: (Explanation):

நின்று
ஸ்தாவரமாயும் - stays put - (refers to inanimate / insentient objects)
இயங்கும்
ஜங்கமமாயுமிருக்கிற - functions - (refers to animate / sentient beings)
ஒன்று அலா ருக்கள் தோறும்
பலவகையான சரீரங்கள் தோறும் - all
ஆவி ஆய்
ஆத்மாவாய் - inner spirit
ஒன்றி உள் கலந்து நின்ற
பொருந்தி பரிஸமாப்ய வர்த்தியாநின்ற - pervading
நின்ன தன்மை இன்னது என்று
உன்னுடைய ஸ்வபாவம் இத்தகையதென்று - perplexing
என்றும்
எக்காலத்திலும் - ever
யார்க்கும்
எப்படிப்பட்ட ஞானிகட்கும் - For All
எண் இறந்த ஆதியாய்
சிந்திக்க முடியாதிருக்கிற ஆதிகாரணபூதனனான   எனம்பெருமானே! (நீ) - Precursor
அன்று
முற்காலத்திலே
நின் உந்திவாய்
உனது திருநாபியில் - out of his navel
நான் முகன்
சதுர்முகப்ரஹ்மாவை - Four-headed Lord of Creations
பயந்த
படைத்த - gave birth
ஆதிதேவன் அல்லையே
முழு முதற் கடவுளல்லையோர். - Primal Lord