Monday, January 28, 2013

006. நாகமேந்து மேருவெற்பை (In loneliness HE supports all)


நாகமேந்து மேருவெற்பை நாகமேந்து மண்ணினை
நாகமேந்து மாகமாக மாகமேந்து வார்புனல்
மாகமேந்து மங்குல்தீயொர் வாயுவைந் தமைந்துகாத்து
ஏகமேந்தி நின்றநீர்மை நின்கணேயி யன்றதே

பதம் பிரித்தது:

நாகம் ந்து மேரு வெற்பை நாகம் ந்து மண்ணினை
நாகம் ந்தும்  ஆகம் ஆகி மாகம் ஏந்தும் வார்ப்புனல்
மாகம் ஏந்தும் அல்குல் தீ ஓர் வாயு ஐந்தும் அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே.


Transliteration:
nAgamEnthum mEruveRppai nAgamEnthum maNNinai
nAgamEnthum mAgamAgi mAgamEndhum vArppunal
mAgamEndhum algul theeyOr vAyuvainthumainthu kAththu
EgamEnthi nindra nIrmay inkaNE iyandrathE


Translation:
The mountain that holds the Heavens, the Tuskers that hold the Earth
the Fountain of Happiness, the Azure that holds the Rivers
the Firmament that holds the clouds, the fire and the winds – all these thou hold
in abandonment – Such grace belongs to Thou alone!

பாசுரம் உச்சரிப்பு: (Play பொத்தானை சொடுக்கவும்)



பதவுரை: (Explanation):


நாகம் ந்து மேரு வெற்பை
The shastras ascribe the ability to hold the heavens (நா அகம்) above to the brilliance arising from the peak of the Mount Meru
சாஸ்திரங்களின் படி சுவர்க்கத்தை மேரு பர்வதம் தாங்கி நிற்பதாக கூறப்படுகிறது. இந்த மேரு பர்வதத்தையும் ...
நாகம் ந்து மண்ணினை
In Sanskrit “Naahaa” can refer to a Snake or an Elephant – here it refers to Elephants – Dhikhgajas which hold the earth – according to shastras.
வடமொழியில் “நாஹா” என்பது யானையும் குறிக்குமாம். எனவே திக்கஜங்களால் தாங்கப்படுகின்ற இந்த பூமியையும் ...
நாகம் ந்தும்  ஆகம் ஆகி 
திருவனதாழ்வானால் தரிக்கப்படும் திருமேனியை உடையவனே  - Thou, whose body is supported by a Snake (Adiseshan)
Another Version of the above Line:
நாகமேந்தும் மாகம் ஆகி
(மற்றொரு நிர்வாஹம் - version)
மாகம் – பெரிய வீடு (அகம்) – VAIKUNDAM
கம் in Sanskrit means சுகம் happiness – அ கம் means துக்கம் sorrow - ந அகம் – means தூக்கமற்ற  (Devoid of any sorrow)
நாகமேந்தும் மாகம் – Vaikundam, which is devoid of any sorrow

துக்கமற்ற வைகுந்தத்தையும் ...
மாகம் ஏந்தும் வார்ப்புனல்
The Ganges which is borne by the Sky விண்ணிலிருந்து பாய்ந்து வரும் கங்கை நதியையும் ...
மாகம் ஏந்தும் அல்குல்
The clouds which are borne by the sky
விண்ணினால் தாங்கப்படும் மேகங்களையும் ---
தீ ஓர்
The Viashvaanaraagni – a kind of fire that supports the mankind
வைச்வாராக்நியையும் ....
வாயு ஐந்தும்
The five kinds of vital aira – Praana, Apana, Vyaana, Udhaana, Samaana – which support the human life
ஐவகை காற்றுக்களையும் ...
அமைந்து காத்து
Thou created all the above and support them too.
உருவாக்கி போஷித்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை
Thou create and support all the above in “SOLO” (abandonment) – this quality of yours …..
ஓராளாய் தாங்கி நிற்கும் உன் தன்மை..
நின்கணே இயன்றதே
Is seen to rest in Thee!
உன் பக்கலிலேயே உள்ளது.

The dictionary meaning of the word "நாகம்" can be seen here -http://goo.gl/xd4CI