Tuesday, January 7, 2014

016. தலைக்கணம் துகள் குழம்பு சாதி (Mountain Hard to Scale)

தலைக்கணத்து கள்குழம்பு சாதிசோதி தோற்றாமாய்
நிலைக்கணங்கள் காணவந்து நிற்றியேலும் நீடிருங்
கலைக்கணங்கள் சொற்பொருள்க ருத்தினால்நி னைக்கொணா
மலைக்கணங்கள் போலுணர்த்தும் மாட்சிநின்றன் மாட்சியே

Audio Introduction by Sri Krishna Premi Anna:


Translation:

Divines, soulless and mixed forms - as these, shiny thou, show up!
Quiescent ones stand in line to behold thee!!
Everlasting vedas fail to fathom thee by words, import or context - yet
Bewitching thou art like a mountain - hard to scale!

Translation in simple English by Dr. N Ranganathan:

Thou had taken incarnations in Thy resplendent form among the higher beings like the devas, among the lowly entities like the plants and among the mixed order of humans and animals such that even the nonmoving entities could experience Thee. However, the eternal Vedas and its limbs cannot fully fathom Thy divine incarnations by either direct meaning of words or by the implied purport or significance. The beauty of Thy avataaras is like the mountain (hard to scale) and they essentially reflect Thy greatness.

பதம் பிரித்தது:

தலைக்கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய்
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன்  மாட்சியே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction:
அவதாரிகை -
திருப் பாற் கடலிலும் நின்று இப்படி தேவ மனுஷ்யாதிகளிலே அவதரித்து ரஷிக்கும்
அளவு அன்றிக்கே -சதவர பர்யந்தமாக சதுர்வித ஸ்ருஷ்டியிலும் அவதரித்து உன்னை
சர்வ அனுபவ யோக்யன் ஆக்கினாலும் -பிரமாண கணங்கள் பரிச்சேதிக்க மாட்டாத படி
இ றே உன்னுடைய அவதார வை லஷண்யம் இருப்பது என்கிறார் -

Azhwar says that although the Lord has taken His incarnations in all four kinds of living forms so that everyone could experience Him, the greatness of the divine incarnations of the Lord remain yet immeasurable even for the Vedas and its limbs which form the Pramaanas (the valid means of knowledge).

வியாக்யானம் -

தலைக்கணத் துகள் குழம்பு சாதி - தேவ கணம் என்ன -சூத்ர கணம் என்ன -நடு உண்டான மனுஷ்ய திர்யக்க்குகள் என்ன - சதுர்வித சரீரங்களிலே - the foremost among the four types of forms namely the deva gana

குழம்பு சாதி - தேவ கணம் புண்ய யோநியாய் -ஸ்தாவரங்கள் பாப யோநியாய் -மனுஷ்ய திர்யக்க்குகள்
இரண்டும் புண்ய பாப மிஸ்ர யோநிகள் யாகையாலே -குழம்பு சாதி என்கிறது - திர்யக்குகளுக்கு மிஸ்ர யோநித்வம் ஆஹார நித்ராதிகளாலே மனுஷ்ய சாம்யம் உண்டாகையாலே ஷூத்ர கணம் என்று -ஸ்தாவரத்துக்கு உப லஷணம் - refers to mixed groups namely the humans and the animal
forms ( they are considered to be formed by mixture of both 'Papa' and 'Punya')

துகள் - -குற்றமும் புழுதியும்  - the lowly forms namely the plant (the nonmoving "sthaavara" group)

சோதி தோற்றமாய் - பரஞ்சோதி ரூப சம்பத்ய -என்கிற திவ்ய சமஸ்தானத்தை சதுர்வித ஜாதிகளிலும்
சஜாதீயமாக்கி அவதரித்து ஸ்தாவர ஜாதியிலும் குப்ஜம்ரமாய் அவதரித்தான் இ றே

நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் - தேவாதிகளே யன்றியே ஸ்தாவரங்களும் உன்னை அனுபவிக்கும்படி வந்து -நின்றாலும் -அதாவது உன்னை ஸ்பர்சித்த வாயு அவற்றை ஸ்பர்சிக்க ஸ்தாவரத்வ ஹேதுவான பாப்பம் போகும் என்கை - 
நிலைக் கணங்கள்: the non-moving forms (Sthaavaras) In Puraanas, the Lord is described to have been born as a dwarf mango tree
காண வந்து : come to experience

நீடு இரும் கலை-இத்யாதி - நீ இப்படி தாழ நின்றாலும் பிரமாணங்கள் உன்னுடைய அவதார வைபவத்தை நெஞ்சாலும் பரிச்சேதிக்க மாட்டாது - the eternal Vedas and the Veda angaas.
Vedas are eternal by their particular order

நீடிரும் கலைக் கணங்கள் - ஸ்வரூபேணவும் -ப்ரவாஹ ரூபேணவும் -நித்தியமான பரப்பை உடைத்தாய் இருந்துள்ள சதுர்தச வித்யா ஸ்தானங்களும்

கலை -என்று வேதமும் அங்கமும் -"அங்காநி சதுரோ வேத" -இத்யாதியிலே சதுர்தச ஸ்தானங்கள் சோழப் பட்டது இ றே

சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா - அபிதாநவ்ர்த்தியாலும் தாத்பர்யவ்ர்த்தியாலும் ஒரோ அவதாரத்தை நெஞ்சாலும் பரிச்சேதிக்க மாட்டாமையாலே by either direct meaning of words or by the implied purport or significance, can not fully fathom 

மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன்  மாட்சியே – பர்வத சமூஹங்கள் போலே அபேத்யமாய் அபரிச்சினமான உன்னுடைய அவதார குண சரித்ரங்கள் என்ற வற்றாலே அறிவிக்கப்படும் வை லஷண்யம் உன் வை லஷண்யம் Thy avataaras and their beauty, like the mountains are hard to scale and essentially reflect Thy greatness.

மாட்சி -அழகு - Beauty



பிரமாணத் திரட்டு -
The vedic and Pasuram quotations given in the Vyakyanam are given below with their context

அங்காநி சதுரோ வேதா மீமாம்ஸா நியாய விஸ்தர:
புராணம் தர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்யோ ஹேதாஸ் சதுர்தஸ (Vishnu Puranam 3-6-28)
The six divisions (limbs) of Vedas, the four Vedas, Meemaamsaa (which investigates Vedic rites and their uses) , Tarkashaastram (logic), Puraanaas, and Dharmashaastram (the Law books) which forms part of Smrithis, are the fourteen Vidyaas. They are referred to as கலைக் கணங்கள்

015. அங்கமாறும் வேதநான்கும் (Treasure House of all the wealth and qualities)

அங்கமாறும் வேதநான்கு மாகிநின்ற வற்றுளே
தங்குகின்ற தன்மையாய்த டங்கடல்ப ணத்தலை
செங்கண்நாக ணைக்கிடந்த செல்வமல்கு சீரினாய்
சங்கவண்ண மன்னமேனி சார்ங்கபாணி யல்லையே.

Audio Introduction by Sri Krishna Premi Anna:


Translation:


Translation in simple English by Dr. N Ranganathan:

Having brought forth the four Vedas and their six limbs, Thou stand as their substantive meaning. In the wide ocean of milk, reposing on the serpent with red eyes on top of its hood, Thou remain as the treasure house of all the wealth and all the auspicious qualities. Did Thou not take the divine form white as the conch (in Krita age) and (in Treta age) come as Sri Rama with the Saarnga bow in his arms?


பதம் பிரித்தது:
அங்கம் ஆறும் வேத நான்கும் ஆகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வம் மல்கு சீரினாய்
சங்க வண்ணம் அன்ன மேனி சாரங்க பாணி அல்லையே!

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction:
அவதாரிகை -
வேதைக சமதிகம்யமான ஸ்வ பாவத்தை உடைய நீ ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவதார கந்தமான திருப்பாற்கடலிலே கண் வளர்ந்து அருளுகிறது பர தசை என்னலாம்படி அங்கு நின்றும் ஆஸ்ரிதர் உகந்த ரூபத்தையே உனக்கு ரூபமாகக் கொண்டு வந்து அவதரித்த உன்னுடைய நீர்மையை ஒருத்தரால் பரிச்சேதிக்க போமோ என்கிறார்

Azhwar in this verse, further elaborates how it is not possible for anyone to fathom fully the true nature of the transcendental Lord who can only be known through the Vedas, who reposes on the serpent bed in the ocean of milk in the form- which becomes the basis of all His divine incarnations, so that He becomes easily accessible to His devotees.

வியாக்யானம் -

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று -
சீக்ஷாத்யங்கங்கள் யாறும் - சீக்ஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் அஷரங்களை உச்சரிக்க வேண்டியதை சீக்ஷை சொல்லும் பிரகிருதி பிரத்யாயங்களை பாகுபடுத்தி வியாகரணம் சொல்லும் அர்த்த விவேகம் நிருக்தம் சொல்லும் காலங்களை ஜ்யோதிஷமும் வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும் அங்கியான வேதங்கள் நாலும் -ஆகிற இவற்றுக்கு பிரவர்தகனாய் நின்று

The six limbs of the Vedas are Seeksha (phonetics), Vyakaranam (Grammar), Niruktham (etymology), Jyothisham (astrology), Kalpasoothram (ceremonial) and Chandas (prosody or the science of Speech-rhythms) The four Vedas are Rig, Yajur, Sama and Atharvana.

In Vedas which stand as flawless means of valid knowledge of truth (Pramana)

அவற்றுளே தங்குகின்ற தன்மையாய் -
சாங்கமான வேதங்களினுள்ளே ப்ரமேயமாய் வர்த்திக்கிற ஸ்வபாவங்களை உடையவனே - ஆகி நின்று அவற்றுளே - நிர்தோஷ பிரமாணமாய் நின்றவற்றுள் என்னவுமாம் வேத ப்ரதிபாத்யமான ஸ்வபாவங்கள் ஆவன -சத்யம் ஞானம் -இத்யாதிகளில் சொன்ன சர்வாதிகத்வம் என்ன -"யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித்" -இத்யாதிகளில் சொன்ன கல்யாண குணங்கள் என்ன -"வ்யாப்ய நாராயணஸ்  ஸ்திதி" -இத்யாதிகளில் சொன்ன உபய விபூதி நாதத்வம் என்ன - மகாரஜதம்வாஸ -இத்யாதிகளில் சொன்ன விக்ரஹ யோகம் என்ன - "யாஷோந்தராதித்ய ஹிரண்மய புருஷ" -இத்யாதிகளில் சொன்ன அவதாரங்கள் என்ன - "தத் விஷ்ணோ பரமம் பதம்" -இத்யாதிகளில் சொன்ன நித்ய விபூதி யோகம் என்ன –இவை

தடம் கடல் இத்யாதி -
வேதைக சமதிகம்யமாய் -ஸ்வபாவங்களைக் கேட்டே போகாதபடி திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி இக் குணங்களை பிரகாசிப்பித்தவனே - இடமுடைதான கடலிலே -உன்னுடைய ஸ்ப்ர்சத்தாலே விகசிதமான பணத்தின் தலையிலே மதுபாநமத்தரைப் போலே சிவந்த திருக் கண்களை உடையவனான
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி -நிரவதிகமான ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் உடையவனே

சங்க வண்ணம் அன்ன மேனி இத்யாதி -
ஷீரார்ணவசாயித்வம் பரத்தாசை என்னும்படி அங்கு நின்றும் க்ருத யுகத்திலே சேதனர் விரும்புகைகாக சங்கம் போலே இருக்கிற திரு மேனியை உடையாய் அவதரித்து - அதுக்கு மேலே த்ரேதா யுகத்தில் ஆஸ்ரித விரோதிகளான ராவணாதி கண்டகரை நிரசிக்கைகாக ஷத்ரிய குலத்தில் வந்து அவதரித்து ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையில் தரித்தவன் அல்லையோ - இப்படி காளமேக நிபாஸ்யாமமான திரு நிறத்தை அழிய மாறியும் - "ஆத்மாநாம் மாநுஷம் மநயே" -என்று பரத்வத்தை அழிய மாறியும் ரஷித்த உன்னுடைய நீர்மையை பரிச்சேதித்து அறியலாவார் ஆர் என்று வாக்ய சேஷம் -



பிரமாணத் திரட்டு -
The vedic and Pasuram quotations given in the Vyakyanam are given below with their context


  1. சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம்
    ஸோஅஸ்னுதே ஸர்வான் காமாந்சஹ ப்ரஹ்மணோ விபஸ்ஸிதேதி
    (Taittiriya Upanishad –Anandavalli-1-2)
    "Brahman is Existence, Intelligence, Infinitude; he who realizes Him treasured in the cave (of his heart) together with the Omniscient Brahman fulfills all wants (experiences all auspicious gunas)"
  2. யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:
    (Mundakopanishad 1-1-10)
    "He Who is (totally) aware of all things and their nature, Whose very thought is of the nature of Knowledge"
  3. யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ருயதே அபிவா
    அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
    (Taittiriya- Narayana Sooktam 11)
    "Narayana pervades both inside and outside of everything, whatever may be, whether seen or heard in this world."
  4. தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
    திவீவ சக்ஷூராததம்
    தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே
    விஷ்ணோர்யத் பரமம் பதம் (Rg- Vishnu Sooktam)
    "The eternal stars (Nitya suris) see always the supreme abode of Vishnu. That supreme abode is effulgent like the sun in the skies, which illuminates everything and is like the eye of all the worlds. In that supreme abode of Vishnu, the wise, the ever devoted and the ever wakeful eternal stars shine."
  5. அப்ரவீத் த்ரிதஸ ஸ்ரேஷ்டாந் ராமோ தர்மப்ருதாம் வர
    ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தாசரதாத்மஜம்
    (Ramayanam –Yuddhakaandam 117-11)
    " Sri Rama, the foremost of those upholding the cause of righteousness replied
    (as follows to the aforesaid jewels among the gods)," I account myself a human being , Rama the son of (Emperor) Dasaratha".
    Thus it is extremely hard to comprehend fully the greatness of the Lord.

Thursday, December 12, 2013

014. தூய்மை யோகமாயினாய் (Not an easy one to mention about)

தூய்மையோக மாயினாய்து ழாயலங்கல் மாலையாய்
ஆமையாகி யாழ்கடல்து யின்றவாதி தேவநின்
நாமதேய மின்னதென்ன வல்லமல்ல மாகிலும்
சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே

Audio Introduction by Sri Krishna Premi Anna:



Translation:

Basel Garlanded Lord, thou hath the flawless state,
Primal Lord who - as a turtle - stood submerged in the ocean,
Nobel identity of thine is not an easy one to mention! - Yet
Basal theme of Samaveda - shows thou as the discus wielded one!!

Translation in simple English by Dr. N Ranganathan:

Thou bring forth the purified state (to the embodied souls), O' Lord adorned by the garland of the tender Tulasi leaves. As the ancient cause, Thou took the form of the divine turtle and stayed under the deep ocean (at the time of the churning of the ocean of milk). I do not have the capacity to delineate the glorious attributes of Thy divine incarnations. However I know Thee to be the Lord with the discus, glorified in Sama Veda (Chaandogyam).

பதம் பிரித்தது:

தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கல் மாலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற ஆதிதேவ நின்
நாமதேயம் இன்னதென்ன வல்லமல்ல ஆகிலும்
சாமவேத கீதனாய சக்ரபாணி அல்லையே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction:
அவதாரிகை -
நம் அவதார ரஹச்யம் நீர் அறிந்த படி என் என்னில் - பிரயோஜனாந்த பரர்க்காக திர்யக் சஜாதீயனாய் வந்து அவதரித்த உன் குணங்களை பரிச்சேதித்து  அறிய மாட்டேன் ஆகிலும் -அவ்வடிவு வேதைக சமதிகம்யம் என்று அறிந்தேன் என்கிறார் -

Azhwar in this verse, replies to the Lord who happened to question him as to how he came to know of the secret behind His incarnations. Azhwar says that he may be unable to fully describe the glorious attributes of the Lord who once took the form of the divine turtle (Koorma avataara) for the sake of the devas who were interested in getting the nectar from the ocean of milk. He knows however, that the resplendent form is that of the discus carrying Lord seated in the solar system glorified in the Chaandogyam.

வியாக்யானம்

தூய்மை யோகமாயினாய் -
அசித் சம்சர்க்கத்தாலே அசுதனான சம்சாரிக்கு உன் கிருபையாலே அசித் சம்சர்க்கத்தை அறுத்து -நித்ய சூரிகளோடு சேர்த்து உன்னை அனுபவிக்க வல்ல சுத்தி யோகத்தை உடையவனே -சம்சாரி சுத்தி யோகத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே -இத்தால் - சம்சார உத்தரணத்துக்கு உபாயமும் நீயே என்கை ஹேய ப்ரத்ய நீகன் ஆனவனே இ றே -சேதனருக்கு சம்சாரம் ஆகிற அசுதியைப் போக்க வல்லான் 

துழாய் அலங்கல் மலையாய்
சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே திருத் துழாய் -நாதத்வ சிஹ்னம் ஆகையாலும் -போஹ்யத்வ சிஹ்னம் ஆகையாலும் ப்ராப்ய பூதனும் நீயே என்கை

ஆமையாகி -
பிரயோஜநாந்தர பரரான தேவர்களுக்கு அமர்த மதனதுக்கு அனுகூலமான கூர்ம வேஷத்தை கொண்டு

ஆழ் கடல் துயின்ற -
அகாதமான கடலிலே மந்த்ரம் அமிழ்ந்தாத படி உன் முதுகிலே அது நின்ற சுழலக் கண் வளர்ந்து அருளினவனே - "ஷீரோத மத்யே த்வபவத் கூர்ம ரூபீஸ்வயம் ஹரி" -எண்ணக் கடவது இ றே

வாதிதேவ -
ஜகத்துக்கு நீயே காரண பூதன் என்னும் இடத்தை பிரகாசிப்பித்தவனே பிரயோஜநாந்த பரர் என்று பாராதே அவர்கள் ஆபத்துக்கு உன்னை அழிய மாறி உதவுகை யாகிற இது உத்பாதகர்க்கு அல்லது கூடுமோ என்கை

நின் நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும் -
கூர்ம ரூபியான தேவரீர் உடைய குண சேஷ்டிதங்களை  ஏவம் விதம் என்று பரிச்சேதித்து சொல்ல மாட்டேன் ஆகிலும் -

நின்னாமதேயம் -
என்று வாச்யமான குண செஷ்டிதங்களை தத் வாசகமான சப்தத்தாலே லஷிக்கிறது - 

சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே
நீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான அதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன் - "யஷோந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே" -என்றும்
"சவித்ர் மண்டலமத்யே வரதீ நாராயணா -த்ர்த சங்கசக்ர" -என்றும் சொல்லக் கடவது இறே



பிரமாணத் திரட்டு -
The vedic and Pasuram quotations given in the Vyakyanam are given below with their context
  1. ஷீரோத மத்யே பகவான் கூர்ம ரூபீ ஸ்வயம் ஹரி
    மந்தராத்ரேரதிஷ்டானம் ப்ரமதோபூன்மஹாமனே (Vishnu Puraanam 1-9-88)
    "In the center of the ocean of milk, Lord Hari who assumed the form of the divine turtle Koorma became the support of the Mandara mountain (during the churning)"
  2. ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே ஹிரண்மயஸ்மஸ்ருர்
    ஹிரண்யகேஸ ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸுவர்ண: தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணி
    (Chandogyam 1-6 and 7)
    "The Person seen seated in the center of the sun, who is beautiful like gold, who has a golden beard and golden hair, every part of whose body from the nail upward is golden. That Person has two eyes that are like the lotus blossomed by the sunrays"
  3. த்யேயஸ் ஸதா சவித்ர் மண்டலமத்யே வரதீ
    நாராயணாயஸ் சஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட
    கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடி
    ஹரீ ஹிரண்மயவபுர் -த்ர்த சங்கசக்ர
    (Narasimha PuraaNam)
    "Narayana who is in the center of the sun, seated on the lotus, adorned by beautiful armlets, ear rings, crown and garland, who has a golden physical form, who carries the conch and the discus, is to be meditated upon always"

Tuesday, December 10, 2013

013.இன்னை என்று சொல்லலாவது இல்லை (Impossible to say who you are)

இன்னையென்று சொல்லலாவ தில்லையாதும் இட்டிடைப்
பின்னைகேள்வ னென்பருன்பி ணக்குணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரு மாதியும்
நின்னையார் நினைக்கவல்லர் நீர்மையால்நி னைக்கிலே.

Audio Introduction by Sri Krishna Premi Anna:


Translation:

Scarce, in thy nature, is anything fathomable. Thine Puzzle-aware
Scholars declare thou as the slender Nappinnai's sweet heart!
Scheming thy profile as a cow herd (thou complicate yet more)!!
Scanty are those who can resolve thou unless it be thine benevolent will!

Translation in simple English by Dr. N Ranganathan:

To state that Thou art of such and such nature is not possible. The enlightened sages who understand the argument between Thy devotees and the non-devotees would state that Thou art the beloved of Nappinnai with the slender waist. When Thou do take birth along with the rest and yet remain different with the most beautiful and divine form, it will be impossible to understand Thee, Thy auspicious names, the glories of Thy birth place and the underlying transcendental form, by any self effort unless revealed by Thy accessible nature.

பதம் பிரித்தது:

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் - இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction:
அவதாரிகை -
இவ் வவதார ரஹஸ்யம் ஒருவருக்கும் அறிய ஒண்ணாதோ என்னில் - கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர -உன் வைலஷண்யம் காணும் அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் - Azhwar states in this verse that the Lord's greatness and the secret of His Avataara (special incarnations) can be understood only if He chooses to reveal them to us. It is not achievable with any amount of self- effort.

வியாக்யானம் -

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் -
Scarce, in thy nature, is anything fathomable
அவதரித்து நிற்கிற நிலையில் -அஜஹத் ஸ்வபாவங்கள் என்ன -சௌலப்யாதிகள் என்ன - இவற்றிலே ஒரு கோடியிலே உன்னை பரிச்சேதிக்க புக்கால் ஏவம்விதன் என்று சொல்லல் ஆவது இல்லை - "ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த" (Thiruvaymozhi)

இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் -
declare thou as the slender Nappinnai's sweet heart
"தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம்" - என்கிறபடியே அவதார ரஹச்யஞானம் உடையவர்களும் மிதுனமே (the pair - He and His consort) ஆஸ்ரயணீயம் - என்று சஜாதீயரில் வ்யாவர்தனான உன்னை உபதேசிப்பார்கள் - நேரிதான இடையை உடைய நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்று சொல்லுவார்கள் யாதுமிட்டு -என்று கீழோடு கூட்டின போது சுபாஸ்ரயத்தை ஓதுகிற பிரகரணங்களில் "அங்குஷ்ட மாதரம்" என்றும் - "அக்நிர் மூர்த்தா சஷு ஷீ சந்த்ர சூர்யௌ" - என்கிறபடியே "த்ரைலோக்ய சரீரன்" என்றும் - இத்யாதிகளில் சொல்லுகிற சுபாஸ்ரயங்களை அடங்க விட்டு - "மனுஷ்யத்வே சமாநுஷீ" -என்று கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீளா வல்லபனே - சுபாஸ்ரயமம் என்பார்கள் -

உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் -
Thine Puzzle-aware scholars
உன் நிமித்தமாக ஆஸ்ரிதருக்கும் அநாஸ்ரிதருக்கும் உண்டான விவாதத்தை அனுசந்திக்கும் பண்டிதர்கள் -அதாகிறது - "பேருமோர் ஆயிரம் பிற பல உடைய வெம்பெருமான்" -என்றாய்த்து ஆஸ்ரிதர் உடைய அறிவு "பேருமோர் உருவம் உளதில்லை" -என்றாய்த்து அநாஸ்ரிதர் உடைய அறிவு இந்த விவாதத்துக்கு அடி நீ என்று அறியுமவர்கள்

பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும் நின்னை -
Scheming (devising) thy profile as (that of) a cow herd, (thou complicate the matters yet more)!!
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கச் செய்தே - சர்வ விஸ ஜாதீயமான வைலஷ்ண்யத்தை உடைய விக்ரஹம் என்ன -அவதாரத்தில் குண செஷ்டிதங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்ன -அவதரித்த தேசப் பிரபாவம் என்ன -அவதார விக்ரஹத்துக்கு நிதானம் என்ன -இவற்றை உடையனான உன்னை - அதவா - அவதார சமாப்தியில் விச்ரம ஸ்தலமான வ்யூஹ விக்ரஹங்கள் என்ன -தத் தத் குண சேஷ்டித வாசகங்கள் ஆன திருநாமங்கள் என்ன - ஆமோதாதி வ்யூஹ நிதானங்கள் என்ன இவற்றுகடியான பரத்வம் என்ன -இவற்றை உடைய உன்னை என்றுமாம்-

யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே
Scanty are those who can resolve thou unless it be thine divine will!
நீர்மையால் நினைக்கில் அல்லது ஆர் நினைக்க வல்லர் -உன்னுடைய நீர்மையினால் நீ அறிவிக்க அறியும் அத்தனை  ஒழிய வேறு அறிய வல்லார் ஆர் -அதாகிறது - "பஹூ நி மேவ்ய தீதாநி" -என்று தொடங்கி –ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்று நீ அறிவித்தாப் போலே அறிவிக்க அறியும் அத்தனை -




பிரமாணத் திரட்டு -
The vedic and Pasuram quotations given in the Vyakyanam are given below with their context

  1. அஜாயமானோ பஹுதா விஜாயதே தச்ய தீரா பரிஜாநந்தி யோனீம் (Purushasuktham) "Although birthless, He takes many births. Only the enlightened ones understand His incarnations well."
  2. அங்குஷ்டமாத்ரேபுருஷோமத்யாஆத்ம நிதிஷ்டதி (Katha Upanishad 2-1-12) -  The Being (Purusha) of the size of the thumb resides in the body.
  3. அக் நிர் மூர்த்தோ சக்ஷுசி சந்ரே சூர்யோ திஷஸ்ரோத்ரோவாக்விவ்ருதாக்ஷ வேதா
    வாயுப் ப்ராணோ ஹ்ருதயம் விஸ்வமச்ய பத்ப்யாம் ப்ருதுவீ ஹ்யேஷ சர்வபூதாந்தராத்மா 
    (Mundaka Upanishad 2-1-4) "For Him the heaven is the head, the moon and the sun are the two eyes, the directions are the two ears, the revealed Vedas are the speech, air is the vital force, the whole Universe is the heart and the earth is His feet. He is the indwelling Self of all"
  4.  தேவேத்யே தேவதேஹேயம் மனுஷ்வத்யே ச மானுஷீ
    விஷ்னோ தேவேனரூபாம் வை கரோத்யேஷாத்மனஸ்தனும் 
    (Vishnu Puranam 1-9-145)
     " When the Lord takes avataara as deva, She takes form of the devas, when He takes the human form She takes that of the human. She makes her physical form suited to the avataara of Vishnu"
  5. பேருமோராயிரம் பிற பல உடைய எம்பெருமான் (Thiruvaimozhi
    1-3-4) "You have innumerable names and forms"
  6. பஹூனீமே வ்யதீதாநி ஜன்மாநி தவ சார்ஜுன - "Many births of Mine have passed O' Arjuna, and so it is with you also" (Geetha- 4-5)
  7. ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வெத்தி தத்வத்த:
    த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைனி மாமேதி சோர்ஜுன
    (Geetha 4-9) "He who thus knows in truth My divine birth and actions, does not get rebirth after leaving the body; he will come to Me, O'Arjuna"

Sunday, December 8, 2013

012. உலகுதன்னை நீபடைத்தி (The Creator is also the protector)

உலகுதன்னை நீபடைத்தி யுள்ளொடுக்கி வைத்திமீண்
டுலகுதன்னு ளேபிறத்தி யோரிடத்தை யல்லையால்
உலகுநின்னொ டொன்றிநிற்க வேறுநிற்றி யாதலால்
உலகில்நின்னை யுள்ளசூழல் யாவருள்ளா வல்லரே

Audio Introduction by Sri Krishna Premi Anna:



Translation:
Patented this universe, thou did - and then protected it in thy belly
Pervaded the world by birth yet permeated without exception
Federated with the universe, yet aloof from one and all
Perceiving thou -  can anyone be capable of?

பதம் பிரித்தது:

உலகு தன்னை நீ படைத்து உள் ஒடுக்கி வைத்து மீண்டு
உலகு தன்னுள்ளே பிறத்து ஓர் இடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction:
அவதாரிகை -
ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர் நினைக்க வல்லார் என்கிறார்
(Besides protecting the universe in the form of its creator, you also protect it by taking various avatars - so says Azhwar in this verse)

உலகு தன்னை நீ படைத்தி - Patented / created this universe, thou did
அசித்தை உபகரணமாக கொண்டு ப்ராக்ர்த சிருஷ்டியைப் பண்ணின நீ ப்ரஹ்மாதி சகல தேவதா அந்தர்யமியாய்க் கொண்டு சகல பதார்த்தங்களையும் சிருஷ்டியா நிற்றி

உள் ஒடுக்கி வைத்தி - then protected it in thy belly
நித்ய நைமித்திகாதி பிரளய ஆபத்துக்களிலே நாம ரூபங்களை இழந்த பதார்த்தங்களை உன் திரு வயிற்றில் வைத்து ரஷியா நிற்றி - இத்தால் -சகல பதார்த்த சிருஷ்டிக்கும் கர்த்தாவாய் -சகல சம்ஹாரங்களிலும் ரஷகனாய் இருக்கிறான் - அடியிலே பஹூஸ்யாம் -என்கிற ஜகத் உபாதான காரண பூதன் என்றது ஆய்த்து

மீண்டு உலகு தன்னுளே பிறத்தி - Pervaded the world by birth
ஜகத் ஏக காரணத்வத்தால் வந்த வைபவத்தின் நின்றும் மீட்டு உன்னாலே ஸ்ருஷ்டமான உலகத்திலே சில ஷேத்ரஞ்ஞருக்கு புத்ரனே வந்து அவதரியா நிற்றி -

மீண்டு -
அது போராமே திரியட்டும் என்றுமாம் -சகல பதார்த்தங்களுக்கும் ஜனகனான நீ உன்னாலே ஸ்ர்ஜயனாய் இருப்பான் ஒரு ஷேத்ரஞ்ஞனை ஜனகனாகக் கொண்டு ஜனிப்பதே - பிரளய ஆபத்திலே சகல பதார்த்தங்களையும் உன் திரு வயிற்றில் வைத்து ரஷித்த நீ ஒரு ஸ்த்ரி வயிற்றில் கர்ப பூதன் ஆவதே "ப்ரீத்யாத்வம் தாரயே சாநம் தாத்மயே நாகிலம் ஜகத்" -என்னக் கடவது இ றே

ஓர் இடத்தை அல்லையால் - yet permeated without exception
ஓர் ஸ்தலத்தாய் என்று நிர்ணயிக்க ஒண்ணாத வனாகையாலெ ஒரு கோடியிலே சேர்த்து அறியப் போகிறது இல்லை -அதாகிறது உபாதான காரணத் வத்தாலே புரை இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது - அவதாரத்தில் சஜாதீய பாவத்தில் புரை இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது -
இது என்னபடி என்கிறார் -

உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி - Federated with the universe, yet aloof from one and all
ஜகத்து உனக்கு சரீரம் ஆகையாலே உன்னை பிரியாதே நிற்க -அசாதாராண விக்ரஹ உக்தனாய் கொண்டு வ்யாவர்த்தனாய் இருத்தி -அதாகிறது -விமுகரான காலத்திலே ஆத்மாவே நின்று சத்தியை நோக்கியும் -அபிமுகீ கரித்த வன்று சுபாஸ்ரயன் ஆகைக்கு அசாதாராண விக்ரஹ உக்தனாய் இருக்கும் என்கை -ஆகையால் ஒரு வகையாலும் பரிச்சேதிக்க ஒண்ணாமையாலே

உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே -  Is anyone capable of perceiving thou?
ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறிய வல்லார் ஆர் -

சூழல் = சூழ்ச்சி

Saturday, December 7, 2013

011. சொல்லினால் தொ டர்ச்சி நீ (Sacred Texts convey the Lord)

சொல்லினால்தொ டர்ச்சிநீசொ லப்படும்பொ ருளும்நீ
சொல்லினால்சொ லப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால்ப டைக்கநீப டைக்கவந்து தோன்றினார்
சொல்லினால்சு ருங்கநின்கு ணங்கள்சொல்ல வல்லரே

Audio introduction by Sri Krishna Premi Anna:


Translation:

Scope of all Texts is to connect and convey thou!
Scarcity of words can't hide thy glory and the one who
scripts creations out of sacred texts - Thou created - can
scribe thy traits, at least, in short!

பதம் பிரித்தது:

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction:
"நசந்ந சாஸ் சிவ ஏவ கேவல -ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே" -என்று ப்ரஹ்மாதிகளுக்கும் காரணத்வம் சொல்லுகிறது இல்லையோ என்ன - உன்னால் ஸ்ருஷ்டரான உன் பெருமையை ஓரோ பிரயோஜனங்களிலே பேச ஷமரும் அன்றிக்கே இருக்கிற இவர்கள் ஆஸ்ரயணீயராக ப்ரசங்கம் என்
கீழ்ச் சொன்ன காரண வாக்யமும் அவ் வஸ்துவைப் பற்ற அந்யபரம் என்கிறார்.

வியாக்யானம் -

சொல்லினால் தொடர்ச்சி நீ - Sacred Texts connect thou to all (creations)
சப்தத்தாலே சித்தமான புருஷார்த்தத்திலே இழிந்தாருக்கு அதிலே உறவு பிறப்பிப்பாயும் நீ - தொடர் -உறவு -அதாவது ப்ரத்யட்ஷ விஷயமான சப்தாதிகளே புருஷார்த்தம் என்று இருக்கும் சம்சாரிகளை
ஒழிய வேதாந்த முகத்தாலே வே தைக ஸமதி கம்யமான வஸ்துவை அறிந்து அவ்வஸ்துவைப் பெற ஆசைப்பட்டவர்களுக்கும் உபக்ர்ம தசையிலே ருசி ஜநகன் -ப்ரஹ்மாதிகள் ப்ரப்த்ரான ஜநகர் அல்லாமையாலே  ருசி ஜநகரும் அல்லர் சொலப்படும் பொருளும் நீ


சொலப்படும் பொருளும் நீSacred Texts convey thou to all (creations)
ஸ்ருதி ச்ம்ர்தியாதிகளிலே ஆஸ்ரயணீ யாராகத் தோற்றுகிற தேவதைகளுக்கு ஆத்மாவும் நீ - ஏநமேகேவ தந்த்யக்நிம் -என்றும் -சதுர்  ஹோதா ரோ யத்ர சம்பதம் கச்சந்தி -என்றும் - யேய ஜந்தி -என்றும்

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ - (Scarcity of words can't hide thy glory)
வேதாதந்தத்தால் பரிச்சேதிகப் படாது என்று தோன்றுகிற தேஜஸ் சப்த வாச்யன் நீ "யதோ வாசோ நிவர்த்தந்தே" -என்றும் - "அவிஜ்ஞா தம் விஜாந தாம" -என்றும் - "யஸ்யாமதம் தஸ்யமதம்" -என்றும் -"பரஞ்சோதி ரூப சம்பத்ய" -என்றும் -நாராயண பரஞ்சோதி இத்யாதிகளிலே உன் ஸ்வரூபாதிகள் அபரிச்சிந்நங்கள் என்றும் -பரஞ்சோதி சப்த வாச்யன் நீ என்றும் சொல்லப்படா நின்றது இறே

சொல்லினால் படைக்க - The one (meant) to script creations out of sacred texts
"யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோ தி தஸ்மை" - நீ கொடுத்த வேதத்தை த்ர்ஷ்டியாகக் கொண்டு ஜகத் சிருஷ்டி பண்ணுவாராக - "ஸ பூரி திவ்யாஹரத்"

நீ படைக்க வந்து தோன்றினார் -thou created (the Lord of Creations - Brahma)
"யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்" -என்கிறபடியே நீ ஸ்ருஷ்டிக்க உன் திரு நாபீ கமலத்திலே வந்து தோன்றின ப்ரஹ்மா முதலான தேவர்கள்

சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே – can scribe thy traits, at least, in short
உன் குணங்களை அறிந்து -பரக்க பேச மாட்டாமை அன்றியே ஒரோ பிரயோஜனங்களிலே சங்ஷேபேண உன் குணங்களைப் பேசவும் மாட்டார் பரதவ சாதகமான குணங்கள் -ஜகத் காரணத்வ சாதகமான குணங்கள் -ஆஸ்ரித அர்த்தமான குணங்கள் இவற்றிலே ஒரோ கோடியைக்  கரை காண மாட்டார்கள்

Wednesday, December 4, 2013

010. தன்னுளே திரைத்து எழும் (The Great Container!)

தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே.

Audio Introduction (by Sri Kirshna Premi Anna):


Translation:

Encompassing soaring white surfy waves - the ocean -
Encloses their abatement too within itself - likewise
Embracing the beings - the standing and the roaming, thou
Envelop everything within thy corpus - What a trait thy hath!

பதம் பிரித்தது:

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction: சர்வ சமாஸ்ரயணீயத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே - "காரணந்து த்யேய" -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீ யம் என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரயணீயத்வமும் தேவரீருடையது என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் - While the Lord is described as the object of worship by everyone in the previous verses, in this verse, the Azhwar describes, with the example of the ocean, how the Lord is also the material cause of this universe.

வியாக்யானம் -

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் இத்யாதி - Encompassing its own rising white surfy waves - the ocean
த்ருஷ்டாந்த்தத்திலே அர்த்தத்தை சிக்ஷத்து த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார் - (he explains the whole concept within an example) தன்னுளே -என்கிற இத்தால் -சரீர பூதசேதன அசேதனங்களும் -ஸ்ருஷ்டாத வியாபாரங்களும் -ஸ்வரூப அந்தர்பூதம் என்கை - (this word describes that all the living and non-living things that live within the ocean are art and parcel of the ocean) திரைத்து எழும் தரங்கம் - "நிஸ்தரங்க ஜலதி" யானது வாயுவாலே கிளர்ந்து எழுந்து எங்கும் ஒக்க சஞ்சரியா நின்றுள்ள திரைகளை உடைத்தாகை - த்ருஷ்டாந்திகத்திலே "வாயு ஸ்தாநீய" பகவத் சங்கல்பம் அடியாக ஸ்ருஷ்டி காலத்திலே பிறந்த குண வைஷம்யம் (the sea gets its tides by the action of the air above it - likwise, all the creatios of the lord are by the Lord's own desires (sankalpa) ) வெண் தடம் கடல் - சஞ்சாரியான திரையையும் அசஞ்சாரியான வெண்மையும் உடைத்தான இடமுடைய கடல் - இது மேலே -நிற்பவும் திரிபவும் -என்கிறதுக்கு திருஷ்டாந்தம் (the waves and the white surf are an allusion to the 'standing' and 'roaming' referred to the later lines)

தன்னுளே திரைத்து எழும் தடங்குகின்ற தன்மை போல் - Encloses their abatement too within itself
வாயு வசத்தாலே பரம்பின திரைகள் மற்றப்படி ஒன்றிலே ஓன்று திரைத்து எழுந்து உப சம்ஹரிக்கிற ஸ்வபாவம் போலே -இத்தால் ஏக த்ரய பரிணாமத்தை சொல்லுகிறது அன்று - (this line explains the oneness of all those that are encompassed, by the example of the ocean which creates waves with the action of the air) கீழ்ப் பாட்டிலே உபாசனம் சொல்லிற்றாய் -இப்பாட்டில் உபாஸ்யமான ஜகத் உபாதான காரணத்தை சொல்லுகிறது -அதாகிறது "சூஷ்ம சித் அசித் விசிஷ்ட" ப்ரஹ்மமே காரணம் -"ஸ்தூல சித் அசித் விசிஷ்ட" ப்ரஹ்மமே கார்யம் என்று வேதாந்த பிரசித்தமான அர்த்தம் -(In the previous verse, the Lord's Superiority which is to be worshiped is shown. In this, it is explained how the Lord is the material cause of all creations - in other words, the Lord togher with his virtual (சூஷ்ம) sentient and insentient material becomes the creator of the universe while his actual (ஸ்தூல) sentient and in sentient material forms the material cause of this universe) இது எத்தாலே அறிவது என்னில் - "ந கர்மா விபாகாத்" -என்கிற ஸூத்ரத்தாலே "சதேவ" -என்கிற அவிபாக ஸ்ருதியாலே -அக்காலத்தில் "ஷேத்ரஞ்ஞர் இல்லாமையாலே கர்மம் இல்லை" என்று பூர்வ பஷித்து - "ஞானவ் த்வா வஜ்ர வீச நீ சௌ" –என்றும் "நித்யோ நித்யாநாம்" -என்று ஷேத்ரஞ்ஞர்களுக்கும் தத் கர்ம ப்ரவாஹத்துக்கும் அநாதித்வம் உண்டாகையாலே -அது அர்த்தம் அன்று என்று நிஷேதித்து -நாம ரூப விவேக பாவத்தாலே சதேவ என்கிற அவதாரணம் உபபன்னம் என்றது இறே திருஷ்டாந்தம் ஏக த்ரவ்ய முகத்தாலே சொன்னார் இவரே அன்று - "யதா சொம்யை கேந  ம்ர்த்பிண்டேந" -என்று உபநிஷத்து "கடக மகுட கர்ணிகாதி பேதைஸ்" -என்று ஸ்ரீ பராசுர பகவான் இத்தை த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார்

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் - Embracing the beings - the standing and the roaming, thou envelop everything within thy corpus
உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பத்தியும் விநாசமுமாய் போருகிற ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தமும் - ப்ரக்ர்த உபசம்ஹார வேளையிலே -தம ஏகி பவதி -என்கிறபடியே தேவரீர் பக்கலிலே அடங்குகின்ற இந்த ஸ்வபாவம்

நின் கண் நின்றதே - What a trait thy hath!
தேவரீர் பக்கலிலே உள்ளது ஓன்று -இவ் உபாதான காரணத்வம் வ்யக்த்யநதரத்தில் இல்லை என்கை முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய் சொல்லி முடித்தாராய் விட்டது -