Saturday, December 7, 2013

011. சொல்லினால் தொ டர்ச்சி நீ (Sacred Texts convey the Lord)

சொல்லினால்தொ டர்ச்சிநீசொ லப்படும்பொ ருளும்நீ
சொல்லினால்சொ லப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால்ப டைக்கநீப டைக்கவந்து தோன்றினார்
சொல்லினால்சு ருங்கநின்கு ணங்கள்சொல்ல வல்லரே

Audio introduction by Sri Krishna Premi Anna:


Translation:

Scope of all Texts is to connect and convey thou!
Scarcity of words can't hide thy glory and the one who
scripts creations out of sacred texts - Thou created - can
scribe thy traits, at least, in short!

பதம் பிரித்தது:

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction:
"நசந்ந சாஸ் சிவ ஏவ கேவல -ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே" -என்று ப்ரஹ்மாதிகளுக்கும் காரணத்வம் சொல்லுகிறது இல்லையோ என்ன - உன்னால் ஸ்ருஷ்டரான உன் பெருமையை ஓரோ பிரயோஜனங்களிலே பேச ஷமரும் அன்றிக்கே இருக்கிற இவர்கள் ஆஸ்ரயணீயராக ப்ரசங்கம் என்
கீழ்ச் சொன்ன காரண வாக்யமும் அவ் வஸ்துவைப் பற்ற அந்யபரம் என்கிறார்.

வியாக்யானம் -

சொல்லினால் தொடர்ச்சி நீ - Sacred Texts connect thou to all (creations)
சப்தத்தாலே சித்தமான புருஷார்த்தத்திலே இழிந்தாருக்கு அதிலே உறவு பிறப்பிப்பாயும் நீ - தொடர் -உறவு -அதாவது ப்ரத்யட்ஷ விஷயமான சப்தாதிகளே புருஷார்த்தம் என்று இருக்கும் சம்சாரிகளை
ஒழிய வேதாந்த முகத்தாலே வே தைக ஸமதி கம்யமான வஸ்துவை அறிந்து அவ்வஸ்துவைப் பெற ஆசைப்பட்டவர்களுக்கும் உபக்ர்ம தசையிலே ருசி ஜநகன் -ப்ரஹ்மாதிகள் ப்ரப்த்ரான ஜநகர் அல்லாமையாலே  ருசி ஜநகரும் அல்லர் சொலப்படும் பொருளும் நீ


சொலப்படும் பொருளும் நீSacred Texts convey thou to all (creations)
ஸ்ருதி ச்ம்ர்தியாதிகளிலே ஆஸ்ரயணீ யாராகத் தோற்றுகிற தேவதைகளுக்கு ஆத்மாவும் நீ - ஏநமேகேவ தந்த்யக்நிம் -என்றும் -சதுர்  ஹோதா ரோ யத்ர சம்பதம் கச்சந்தி -என்றும் - யேய ஜந்தி -என்றும்

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ - (Scarcity of words can't hide thy glory)
வேதாதந்தத்தால் பரிச்சேதிகப் படாது என்று தோன்றுகிற தேஜஸ் சப்த வாச்யன் நீ "யதோ வாசோ நிவர்த்தந்தே" -என்றும் - "அவிஜ்ஞா தம் விஜாந தாம" -என்றும் - "யஸ்யாமதம் தஸ்யமதம்" -என்றும் -"பரஞ்சோதி ரூப சம்பத்ய" -என்றும் -நாராயண பரஞ்சோதி இத்யாதிகளிலே உன் ஸ்வரூபாதிகள் அபரிச்சிந்நங்கள் என்றும் -பரஞ்சோதி சப்த வாச்யன் நீ என்றும் சொல்லப்படா நின்றது இறே

சொல்லினால் படைக்க - The one (meant) to script creations out of sacred texts
"யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோ தி தஸ்மை" - நீ கொடுத்த வேதத்தை த்ர்ஷ்டியாகக் கொண்டு ஜகத் சிருஷ்டி பண்ணுவாராக - "ஸ பூரி திவ்யாஹரத்"

நீ படைக்க வந்து தோன்றினார் -thou created (the Lord of Creations - Brahma)
"யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்" -என்கிறபடியே நீ ஸ்ருஷ்டிக்க உன் திரு நாபீ கமலத்திலே வந்து தோன்றின ப்ரஹ்மா முதலான தேவர்கள்

சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே – can scribe thy traits, at least, in short
உன் குணங்களை அறிந்து -பரக்க பேச மாட்டாமை அன்றியே ஒரோ பிரயோஜனங்களிலே சங்ஷேபேண உன் குணங்களைப் பேசவும் மாட்டார் பரதவ சாதகமான குணங்கள் -ஜகத் காரணத்வ சாதகமான குணங்கள் -ஆஸ்ரித அர்த்தமான குணங்கள் இவற்றிலே ஒரோ கோடியைக்  கரை காண மாட்டார்கள்

No comments:

Post a Comment