Sunday, December 8, 2013

012. உலகுதன்னை நீபடைத்தி (The Creator is also the protector)

உலகுதன்னை நீபடைத்தி யுள்ளொடுக்கி வைத்திமீண்
டுலகுதன்னு ளேபிறத்தி யோரிடத்தை யல்லையால்
உலகுநின்னொ டொன்றிநிற்க வேறுநிற்றி யாதலால்
உலகில்நின்னை யுள்ளசூழல் யாவருள்ளா வல்லரே

Audio Introduction by Sri Krishna Premi Anna:



Translation:
Patented this universe, thou did - and then protected it in thy belly
Pervaded the world by birth yet permeated without exception
Federated with the universe, yet aloof from one and all
Perceiving thou -  can anyone be capable of?

பதம் பிரித்தது:

உலகு தன்னை நீ படைத்து உள் ஒடுக்கி வைத்து மீண்டு
உலகு தன்னுள்ளே பிறத்து ஓர் இடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction:
அவதாரிகை -
ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர் நினைக்க வல்லார் என்கிறார்
(Besides protecting the universe in the form of its creator, you also protect it by taking various avatars - so says Azhwar in this verse)

உலகு தன்னை நீ படைத்தி - Patented / created this universe, thou did
அசித்தை உபகரணமாக கொண்டு ப்ராக்ர்த சிருஷ்டியைப் பண்ணின நீ ப்ரஹ்மாதி சகல தேவதா அந்தர்யமியாய்க் கொண்டு சகல பதார்த்தங்களையும் சிருஷ்டியா நிற்றி

உள் ஒடுக்கி வைத்தி - then protected it in thy belly
நித்ய நைமித்திகாதி பிரளய ஆபத்துக்களிலே நாம ரூபங்களை இழந்த பதார்த்தங்களை உன் திரு வயிற்றில் வைத்து ரஷியா நிற்றி - இத்தால் -சகல பதார்த்த சிருஷ்டிக்கும் கர்த்தாவாய் -சகல சம்ஹாரங்களிலும் ரஷகனாய் இருக்கிறான் - அடியிலே பஹூஸ்யாம் -என்கிற ஜகத் உபாதான காரண பூதன் என்றது ஆய்த்து

மீண்டு உலகு தன்னுளே பிறத்தி - Pervaded the world by birth
ஜகத் ஏக காரணத்வத்தால் வந்த வைபவத்தின் நின்றும் மீட்டு உன்னாலே ஸ்ருஷ்டமான உலகத்திலே சில ஷேத்ரஞ்ஞருக்கு புத்ரனே வந்து அவதரியா நிற்றி -

மீண்டு -
அது போராமே திரியட்டும் என்றுமாம் -சகல பதார்த்தங்களுக்கும் ஜனகனான நீ உன்னாலே ஸ்ர்ஜயனாய் இருப்பான் ஒரு ஷேத்ரஞ்ஞனை ஜனகனாகக் கொண்டு ஜனிப்பதே - பிரளய ஆபத்திலே சகல பதார்த்தங்களையும் உன் திரு வயிற்றில் வைத்து ரஷித்த நீ ஒரு ஸ்த்ரி வயிற்றில் கர்ப பூதன் ஆவதே "ப்ரீத்யாத்வம் தாரயே சாநம் தாத்மயே நாகிலம் ஜகத்" -என்னக் கடவது இ றே

ஓர் இடத்தை அல்லையால் - yet permeated without exception
ஓர் ஸ்தலத்தாய் என்று நிர்ணயிக்க ஒண்ணாத வனாகையாலெ ஒரு கோடியிலே சேர்த்து அறியப் போகிறது இல்லை -அதாகிறது உபாதான காரணத் வத்தாலே புரை இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது - அவதாரத்தில் சஜாதீய பாவத்தில் புரை இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது -
இது என்னபடி என்கிறார் -

உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி - Federated with the universe, yet aloof from one and all
ஜகத்து உனக்கு சரீரம் ஆகையாலே உன்னை பிரியாதே நிற்க -அசாதாராண விக்ரஹ உக்தனாய் கொண்டு வ்யாவர்த்தனாய் இருத்தி -அதாகிறது -விமுகரான காலத்திலே ஆத்மாவே நின்று சத்தியை நோக்கியும் -அபிமுகீ கரித்த வன்று சுபாஸ்ரயன் ஆகைக்கு அசாதாராண விக்ரஹ உக்தனாய் இருக்கும் என்கை -ஆகையால் ஒரு வகையாலும் பரிச்சேதிக்க ஒண்ணாமையாலே

உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே -  Is anyone capable of perceiving thou?
ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறிய வல்லார் ஆர் -

சூழல் = சூழ்ச்சி

No comments:

Post a Comment