Friday, May 18, 2012

001. பூநிலாய (Countdown from Five)


பூநிலாய வைந்துமாய் புனர்க்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்தகாலி ரண்டுமாய்
மீநிலாய தொன்றாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார்நினைக்க வல்லரே?
பொழிப்புரை:
பூமியின் குணங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்தும்,
நீரின் குணங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம் என்ற நான்கும்,
தீயின் குணங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம் என்ற மூன்றும்,
காற்றின் குணங்களான சப்தம், ஸ்பர்சம் என்ற இரண்டும்,
வானத்தின் குணமான சப்தம் என்ற ஒன்றும்,
ஆகிய எல்லா வகை குணங்களின் உள்ளிருந்து அவற்றின் பொதுத் தன்மையாய் நிற்கும்
உன்னை அறிய வல்லவர் யாரோ?

Translation:
Penta flavours of earth, quadrant of virtues in water,
Sensed threesome of the flames, couple beheld in the wind,
Pensive solo of the ether - medley of such countless traits that matter!
When thou art of such colours, can thou be imagined?
(earth – பூ; water – புனர்(ல்); fire – தீ; Wind – கால்; Ether / sky – மீ)
Transliteration:
Poonilaaya vainthumaayp punarkkaN nindra naangumaay
theenilaaya moondrumaaych siranthakaalirandumaay,
meenilaayathondraagi vEruvEru thanmayaay,
neenilaaya vaNNa ninnay yaarninaikka vallarE?

No comments:

Post a Comment