ஆறுமாறு மாறுமா யோரைந்துமைந்து மைந்துமாய்
ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்
ஊறொடோசை யாயவைந்து மாய ஆய மாயனே
பதம் பிரித்தது:
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்து ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்
ஊறொடோசை ஆய ஐந்தும் மாயமாய மாயனே
Transliteration:
aarumaarum aarumaayor ainthumainthumainthumaay
ERuseeri randu moondrum Ezhum aarum ettumaay
vERu vERu gnaanamaaki meyyunOdu poyyumaay
oorOdOsai aayavainthu maayamaaya maayanE.
Translation:
Thou propagate the trio of Sextets and overlord the trio of pentad in the universe;
Thou stand behind the duo and the trio - and Showeth the heptad, sextet and the octal
Thou manifest as different paths - both real and false
Thou stayeth as the penta of essence of the taste and sound, My Lord Magical!
Explanation:
In view of the complicated medley of Digits given in this verse, I give the interpretations given by great teachers (vyakhyanakarthas) of the past:
Trio of sextets are
- sextet of Holy Duties of a Hindu (Learing, teaching, sacrificing, overseeing sacrifices by others, giving gifts, receiving gifts from others),
- sextet of Seasons (spring, summer, rainy season, autumn, cloudy season and winter), and
- sextet of Sacrifices (Aagneyam, Agnishomeeyam, Upaamsu, Iyndram
2 items and Iyndraagnam);
Trio of pentad are
- Pentad of elements - the earth, water, fire, air and the sky
- Pentad of worshipful objects - the Gods, the ancestors, the living beings, the humans and the sages
- Pentad of air within the being - breath-in air (prana), breath-out air (apana), air mingled with eaten food for digestion (vyana), air migled with digested food for removal of waste (udhana) and the air that keeps the body balance (samana)
The duo are the duo of great possessions - knowledge of God and Detachment from gratification of senses;
The trio is the trio of supreme devotion - visualisation of Lord('para bakthi'); Mentally Mingling with Lord ('para gnanam') and inseperableness from Lord ('parama bakthi');
The heptad is the heptad of special qualities, namely
- wisdom,
- dispassion
- practice of worship / meditation
- performing the five great sacrifices
- observing truthfulness, compassion and generosity
- Discarding of Mental Anguish
- Forsaking worldly pleasures
The sextet are the sextet of desirable objects namely:
- wisdom, strength, wealth, courage, power and brilliance
The octal are the octal of desirable attributes of a liberated soul - no sin, no decrepitude, no death, no sorrow, no hunger, no thirst, has unfailing desires, and
unfailing will
பொழிப்புரை:
ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களில் கூறப்பட்டுள்ள பல வஸ்துக்களைக் குறிப்பிட்டு இந்த பாசுரம் அவற்றின் காரணகர்த்தா நாராயணனே என்று ஸ்தாபிக்கிறது .
ஆறு வகை நியமனங்களா ன (1) அத்யயனம் (2)அத்யாபனம் (3) யஜனம் (4) யாஜனம் (5) தானம் (6) பிரதிக்கிரஹம் , மற்றும் ஆறு வகை காலங்களான (1) வசந்தம் (2) கிரீஷ்மம் (3) வர்ஷம் (4) ஸரத் (5) ஹேமந்தம் (6) ஸிஸி ரம் , மற்றும் ஆறுவகை யஞ்ஞங்களான (1) ஆக்ஞேயம் (2) அக்நீஷோமியம் (3) உபாம்சுஜாயம் (4) ஐந்த்ரம் ததி, (5) ஐந்த்ரம் பய (6) ஐந்த்ரோஞ்ஞயம் என்றவாறு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள யாவையும் நீயாக இருக்கிறாய் .
ஐவகை ப்ரீதிவஸ்துக்களாக வேதங்களில் சொல்லப்பட்டுள்ள (1) தேவ (2) பித்ரு (3) பூத (4) மானுஷ்ய (5) பிரம்மம் ஆகியவைகளாயும் , மற்றும் மனித உடலினில் காணப்படும் ஐவகை வாயுக்களான (1) பிராண (2) அபான (3) வ்யான (4) உதான (5) சமான வாயுக்களாயும் மற்றும் யாகங்களில் இருக்கவேண்டிய ஐவகை தீ ஜ்வாலைகளான (1) கார்ஹபத்யம் (2) ஆஹாவநீயம் (3) தக்ஷினாக்னி (4) ஸப்யம் (5) ஆவஸ்த்யம் என்ற இப்போருள்களுக்கேல்லாம் உள்ளுறைபவனாக நீயே இருக்கின்றாய் .
சிறந்த குணங்களாக கூறப்பட்டுள்ள (1) இறையறிவு (2) விஷய வைராக்கியம் என்ற இரண்டையும் உன்னை அடையும் உபாயமான (1) பர பக்தி (2) பரஞ்ஞான பக்தி (3) பரம பக்தி என்ற மூன்றையும் அளிப்பவனாக இருக்கிறாய் .
இந்த உபாயங்களின் முதல் படியை அடைய வேண்டுமென்பார் முதலில் பெறவேண்டிய ஏழு சாதனங்களான (1) விவேகம், (2) விமோஹம் (3) அப்யாசம் (4) க்ரியா (5) கல்யாணம் (6) அனவசாதனம் (7) அனுத்தர்ஷம் என்றவற்றையும் கற்ப்பிப்பவன் நீயே.
இவ்வாறு உன்னை அடைபவர்களுக்கு குனாதிசயங்களாக (1) ஞாநம் , (2) பலம், (3) ஐஸ்வர்யம், (4) வீர்யம் (5)சக்தி, (6) தேஜஸ் ஆகியவைகளையும் இவர்களது பேற்றின் பிரதி பலன்களாக (1 & 2)பாவபுண்ணிய மின்மை, (3)சாவின்மை (4) துக்கமின்மை (5) பசியின்மை (6) தாகமின்மை (7) வேட்கையின்மை (8) தோல்வியின்மை ஆகியவற்றையும் நீயே அளிக்கின்றாய்.
இவ்வகை பேற்றை பெறமுடியாத யாவர்க்கும் நீயே பொய்ஞ்ஞானமாகவும் மெய்ஞ்ஞானமாகவும் விதவிதமாக அருளுகிறாய்.
இவ்வாறு கண்டு, கேட்டு, உற்று முகர்ந்தது, உண்டு அறியப்படும் எல்லாவித ரசங்களாகவும் இருக்கும் மாயனே நீ!
No comments:
Post a Comment