Wednesday, December 4, 2013

010. தன்னுளே திரைத்து எழும் (The Great Container!)

தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே.

Audio Introduction (by Sri Kirshna Premi Anna):


Translation:

Encompassing soaring white surfy waves - the ocean -
Encloses their abatement too within itself - likewise
Embracing the beings - the standing and the roaming, thou
Envelop everything within thy corpus - What a trait thy hath!

பதம் பிரித்தது:

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction: சர்வ சமாஸ்ரயணீயத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே - "காரணந்து த்யேய" -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீ யம் என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரயணீயத்வமும் தேவரீருடையது என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் - While the Lord is described as the object of worship by everyone in the previous verses, in this verse, the Azhwar describes, with the example of the ocean, how the Lord is also the material cause of this universe.

வியாக்யானம் -

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் இத்யாதி - Encompassing its own rising white surfy waves - the ocean
த்ருஷ்டாந்த்தத்திலே அர்த்தத்தை சிக்ஷத்து த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார் - (he explains the whole concept within an example) தன்னுளே -என்கிற இத்தால் -சரீர பூதசேதன அசேதனங்களும் -ஸ்ருஷ்டாத வியாபாரங்களும் -ஸ்வரூப அந்தர்பூதம் என்கை - (this word describes that all the living and non-living things that live within the ocean are art and parcel of the ocean) திரைத்து எழும் தரங்கம் - "நிஸ்தரங்க ஜலதி" யானது வாயுவாலே கிளர்ந்து எழுந்து எங்கும் ஒக்க சஞ்சரியா நின்றுள்ள திரைகளை உடைத்தாகை - த்ருஷ்டாந்திகத்திலே "வாயு ஸ்தாநீய" பகவத் சங்கல்பம் அடியாக ஸ்ருஷ்டி காலத்திலே பிறந்த குண வைஷம்யம் (the sea gets its tides by the action of the air above it - likwise, all the creatios of the lord are by the Lord's own desires (sankalpa) ) வெண் தடம் கடல் - சஞ்சாரியான திரையையும் அசஞ்சாரியான வெண்மையும் உடைத்தான இடமுடைய கடல் - இது மேலே -நிற்பவும் திரிபவும் -என்கிறதுக்கு திருஷ்டாந்தம் (the waves and the white surf are an allusion to the 'standing' and 'roaming' referred to the later lines)

தன்னுளே திரைத்து எழும் தடங்குகின்ற தன்மை போல் - Encloses their abatement too within itself
வாயு வசத்தாலே பரம்பின திரைகள் மற்றப்படி ஒன்றிலே ஓன்று திரைத்து எழுந்து உப சம்ஹரிக்கிற ஸ்வபாவம் போலே -இத்தால் ஏக த்ரய பரிணாமத்தை சொல்லுகிறது அன்று - (this line explains the oneness of all those that are encompassed, by the example of the ocean which creates waves with the action of the air) கீழ்ப் பாட்டிலே உபாசனம் சொல்லிற்றாய் -இப்பாட்டில் உபாஸ்யமான ஜகத் உபாதான காரணத்தை சொல்லுகிறது -அதாகிறது "சூஷ்ம சித் அசித் விசிஷ்ட" ப்ரஹ்மமே காரணம் -"ஸ்தூல சித் அசித் விசிஷ்ட" ப்ரஹ்மமே கார்யம் என்று வேதாந்த பிரசித்தமான அர்த்தம் -(In the previous verse, the Lord's Superiority which is to be worshiped is shown. In this, it is explained how the Lord is the material cause of all creations - in other words, the Lord togher with his virtual (சூஷ்ம) sentient and insentient material becomes the creator of the universe while his actual (ஸ்தூல) sentient and in sentient material forms the material cause of this universe) இது எத்தாலே அறிவது என்னில் - "ந கர்மா விபாகாத்" -என்கிற ஸூத்ரத்தாலே "சதேவ" -என்கிற அவிபாக ஸ்ருதியாலே -அக்காலத்தில் "ஷேத்ரஞ்ஞர் இல்லாமையாலே கர்மம் இல்லை" என்று பூர்வ பஷித்து - "ஞானவ் த்வா வஜ்ர வீச நீ சௌ" –என்றும் "நித்யோ நித்யாநாம்" -என்று ஷேத்ரஞ்ஞர்களுக்கும் தத் கர்ம ப்ரவாஹத்துக்கும் அநாதித்வம் உண்டாகையாலே -அது அர்த்தம் அன்று என்று நிஷேதித்து -நாம ரூப விவேக பாவத்தாலே சதேவ என்கிற அவதாரணம் உபபன்னம் என்றது இறே திருஷ்டாந்தம் ஏக த்ரவ்ய முகத்தாலே சொன்னார் இவரே அன்று - "யதா சொம்யை கேந  ம்ர்த்பிண்டேந" -என்று உபநிஷத்து "கடக மகுட கர்ணிகாதி பேதைஸ்" -என்று ஸ்ரீ பராசுர பகவான் இத்தை த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார்

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் - Embracing the beings - the standing and the roaming, thou envelop everything within thy corpus
உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பத்தியும் விநாசமுமாய் போருகிற ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தமும் - ப்ரக்ர்த உபசம்ஹார வேளையிலே -தம ஏகி பவதி -என்கிறபடியே தேவரீர் பக்கலிலே அடங்குகின்ற இந்த ஸ்வபாவம்

நின் கண் நின்றதே - What a trait thy hath!
தேவரீர் பக்கலிலே உள்ளது ஓன்று -இவ் உபாதான காரணத்வம் வ்யக்த்யநதரத்தில் இல்லை என்கை முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய் சொல்லி முடித்தாராய் விட்டது -

No comments:

Post a Comment