Wednesday, December 4, 2013

010. தன்னுளே திரைத்து எழும் (The Great Container!)

தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே.

Audio Introduction (by Sri Kirshna Premi Anna):


Translation:

Encompassing soaring white surfy waves - the ocean -
Encloses their abatement too within itself - likewise
Embracing the beings - the standing and the roaming, thou
Envelop everything within thy corpus - What a trait thy hath!

பதம் பிரித்தது:

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction: சர்வ சமாஸ்ரயணீயத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே - "காரணந்து த்யேய" -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீ யம் என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரயணீயத்வமும் தேவரீருடையது என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் - While the Lord is described as the object of worship by everyone in the previous verses, in this verse, the Azhwar describes, with the example of the ocean, how the Lord is also the material cause of this universe.

வியாக்யானம் -

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் இத்யாதி - Encompassing its own rising white surfy waves - the ocean
த்ருஷ்டாந்த்தத்திலே அர்த்தத்தை சிக்ஷத்து த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார் - (he explains the whole concept within an example) தன்னுளே -என்கிற இத்தால் -சரீர பூதசேதன அசேதனங்களும் -ஸ்ருஷ்டாத வியாபாரங்களும் -ஸ்வரூப அந்தர்பூதம் என்கை - (this word describes that all the living and non-living things that live within the ocean are art and parcel of the ocean) திரைத்து எழும் தரங்கம் - "நிஸ்தரங்க ஜலதி" யானது வாயுவாலே கிளர்ந்து எழுந்து எங்கும் ஒக்க சஞ்சரியா நின்றுள்ள திரைகளை உடைத்தாகை - த்ருஷ்டாந்திகத்திலே "வாயு ஸ்தாநீய" பகவத் சங்கல்பம் அடியாக ஸ்ருஷ்டி காலத்திலே பிறந்த குண வைஷம்யம் (the sea gets its tides by the action of the air above it - likwise, all the creatios of the lord are by the Lord's own desires (sankalpa) ) வெண் தடம் கடல் - சஞ்சாரியான திரையையும் அசஞ்சாரியான வெண்மையும் உடைத்தான இடமுடைய கடல் - இது மேலே -நிற்பவும் திரிபவும் -என்கிறதுக்கு திருஷ்டாந்தம் (the waves and the white surf are an allusion to the 'standing' and 'roaming' referred to the later lines)

தன்னுளே திரைத்து எழும் தடங்குகின்ற தன்மை போல் - Encloses their abatement too within itself
வாயு வசத்தாலே பரம்பின திரைகள் மற்றப்படி ஒன்றிலே ஓன்று திரைத்து எழுந்து உப சம்ஹரிக்கிற ஸ்வபாவம் போலே -இத்தால் ஏக த்ரய பரிணாமத்தை சொல்லுகிறது அன்று - (this line explains the oneness of all those that are encompassed, by the example of the ocean which creates waves with the action of the air) கீழ்ப் பாட்டிலே உபாசனம் சொல்லிற்றாய் -இப்பாட்டில் உபாஸ்யமான ஜகத் உபாதான காரணத்தை சொல்லுகிறது -அதாகிறது "சூஷ்ம சித் அசித் விசிஷ்ட" ப்ரஹ்மமே காரணம் -"ஸ்தூல சித் அசித் விசிஷ்ட" ப்ரஹ்மமே கார்யம் என்று வேதாந்த பிரசித்தமான அர்த்தம் -(In the previous verse, the Lord's Superiority which is to be worshiped is shown. In this, it is explained how the Lord is the material cause of all creations - in other words, the Lord togher with his virtual (சூஷ்ம) sentient and insentient material becomes the creator of the universe while his actual (ஸ்தூல) sentient and in sentient material forms the material cause of this universe) இது எத்தாலே அறிவது என்னில் - "ந கர்மா விபாகாத்" -என்கிற ஸூத்ரத்தாலே "சதேவ" -என்கிற அவிபாக ஸ்ருதியாலே -அக்காலத்தில் "ஷேத்ரஞ்ஞர் இல்லாமையாலே கர்மம் இல்லை" என்று பூர்வ பஷித்து - "ஞானவ் த்வா வஜ்ர வீச நீ சௌ" –என்றும் "நித்யோ நித்யாநாம்" -என்று ஷேத்ரஞ்ஞர்களுக்கும் தத் கர்ம ப்ரவாஹத்துக்கும் அநாதித்வம் உண்டாகையாலே -அது அர்த்தம் அன்று என்று நிஷேதித்து -நாம ரூப விவேக பாவத்தாலே சதேவ என்கிற அவதாரணம் உபபன்னம் என்றது இறே திருஷ்டாந்தம் ஏக த்ரவ்ய முகத்தாலே சொன்னார் இவரே அன்று - "யதா சொம்யை கேந  ம்ர்த்பிண்டேந" -என்று உபநிஷத்து "கடக மகுட கர்ணிகாதி பேதைஸ்" -என்று ஸ்ரீ பராசுர பகவான் இத்தை த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார்

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் - Embracing the beings - the standing and the roaming, thou envelop everything within thy corpus
உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பத்தியும் விநாசமுமாய் போருகிற ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தமும் - ப்ரக்ர்த உபசம்ஹார வேளையிலே -தம ஏகி பவதி -என்கிறபடியே தேவரீர் பக்கலிலே அடங்குகின்ற இந்த ஸ்வபாவம்

நின் கண் நின்றதே - What a trait thy hath!
தேவரீர் பக்கலிலே உள்ளது ஓன்று -இவ் உபாதான காரணத்வம் வ்யக்த்யநதரத்தில் இல்லை என்கை முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய் சொல்லி முடித்தாராய் விட்டது -

009. தாதுலாவு கொன்றை மாலை - (Virtuous to the self indulgent as well as the scholars)

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாயசீர்
வேதவாணர் கீதவேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே

Audio:




Upanyasam by Sri Krishna Premi Anna on this verse:



Translation:

Entwined dark crown worn Shiva with nectar full garland of cassia
Entreat on thy feet with the vedic chants - such are thy Virtues and Fairness!
Enlightened scholars of vedic virtues
Enthrall thee with vedic verses - such are thy Virtues and Fairness!

பதம் பிரித்தது:

தாது உலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நிர்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction: இப்படி அபரிச்சேத்ய வைபவன் ஆகையாலே பிரயோஜனாந்த பரரில் அக்ர கண்யனான ருத்ரனனும் -வைதிக அக்ரேசரராய் -அநந்ய பிரயோஜனரான சாத்விக ஜனங்களும் உன்னையே ஆஸ்ரயிக்கையாலே சர்வ சமாஸ்ரயணீ யானும் நீயே என்கிறார் –

வியாக்யானம் -

தாதுலாவித்யாதி - (தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்): Entwined dark crown worn Shiva with nectar full garland of cassia
தாது மிக்க கொன்றை மாலை என்ன -நெருங்கி சிவந்த ஜடை என்ன -இவற்றை உடைய ருத்ரன் கொன்றை மாலையைச் சொல்லுகையாலே -போக ப்ரதானன் என்றும் (he is a connoisure of all pleasures as he wears a Nectar full garland of cassia flowers) - தீர்க்கத பாவாகையாலே செறிந்து ஸ்தான பாஹூள்யத்தாலே சிவந்து இருக்கிற ஜடையை உடையான் ஆகையாலே -அந்த போகம் தான் சாதித்து லபித்தது என்றும் சொல்லுகிறது - இத்தால் -போகமே புருஷார்த்தம் -அது தானே ஈஸ்வரனை ஆஸ்ரயித்து பெற வேணும் என்கிறது

நீதியால் வணங்கு பாத - Entreat on thy feet with the vedic chants
தேவரீரை ஐஸ்வர்ய விசிஷ்டனாக ஆஸ்ரயிக்க சொல்லுகிற வேதோக்த ப்ரகாரத்தாலே அவன் உபாசிக்கிற திருவடிகளை உடையவனே

நின்மலா - "The Fair One" - since HE does not distinguish between the learned selfless scholars and the Shiva who only seeks pleasures
பிரயோஜனாந்தரங்களை அபேஷிக்கிறது -ஈச்வரோஹம் -என்று இருக்கிற துர்மானி ஆஸ்ரயித்தான் என்று -இத் தோஷங்களை நினையாதே -நம் பக்கலிலே சாபேஷனாய் வந்தான் என்கிற குணத்தையே நினைத்து -அநந்ய பிரயோஜநருக்கு முகம் கொடுக்குமா போலே முகம் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே - இப்படி விஷயீ கரித்து அவனுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் ஏது என்னில் மஹா தேவஸ் சர்வ மேதே மஹாத்மா ஹூத் வாத்மானம் தேவ தேவோ பபூவ - என்கிறபடியே தேவ தேவத்வத்தை கொடுத்தவனே - இது பிரயோஜநாந்தர பரர் எல்லாருக்கும் உப லஷணம்

நிலாயா சீர் - "virtues"
வர்த்திக்கிற குணங்கள் - அதாகிறது ஞான சாதனமான அமாநித்வாத் யாத்மகுணங்களாலும்
உபாசன அங்கமான சம தமாதி குணங்களாலும் சம்பன்னராய் இருக்கை அங்கன் அன்றியே -
நிலாய சீர் வேதம் -என்று வேத விசேஷணமாய் -நித்யத்வா -அபௌருஷேயத்வ நிர் தோஷத்வங்களாலே - காரண தோஷ பாதக ப்ரத்யயாதி தோஷ ரஹித கல்யாண குணங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

வேத வாணர் - Enlightened scholars of vedic virtues
வேதங்களுக்கு நிர்வஹகர் என்னலாம் படி வேதார்த்தத்தை கரை கண்டவர்

கீத வேள்வி - Enthrall with vedic verses
அந்த வேதார்த்த அனுஷ்டானமாய் சாம கான பிரதானமான யாகங்களிலே ப்ரவர்த்தர் ஆனவர்கள் அதாவது -ஆத்ம யாதாம்ய ஞான பூர்வகமாக த்ரிவித பரித்யாக உக்தராய் பகவத் சமாராதான புத்தியாலே அனுஷ்டிக்கும் யஞ்ஞங்கள்

நீதியான கேள்வியார் - scholars of vedic virtues
க்ரமப்படி ஸ்ரவண மனனங்களை செய்பவர்கள் - உக்தமான வேதார்த்த தாத்பர்யம் கைப்படுகைக்கும் தத் கார்யமான கர்ம யோகாத்யா அனுஷ்டானங்களுக்கும் அடியான கேள்வியை உடையவர்கள் - நீதியான கேள்வி யாகிறது -ப்ரீஷ்ய லோகான் -இத்யாதியில் சொல்லுகிறபடியே நிர் வேதா வ்ர்த்தி பிறந்து ப்ரஹ்ம நிஷ்டரான ஆசார்யன் பக்கலில் உபசன்னராய் "ச்ரோதவ்யோ மந்தவ்ய" -என்கிறபடியே சரவண மனனங்களை பண்ணுகை

நீதியால் வணங்குகின்ற நீர்மை - Enthrall thee with vedic verses 
"நிதித்யாஸிதவ்ய" -என்கிறபடியே கர்ம அங்கமான அநவரத பாவனை பண்ணுகைக்கு
உபாச்யனாய் நிற்கிற ஸ்வபாவம்

நின் கண் நின்றதே - such are thy virtues
உன் பக்கலிலே வர்த்திக்கிறது இத்தனை - அவதாரணத்தாலே வேறு ஆஸ்ரயணீயர் இல்லை -என்கிறார்

008. ஆதியான வானவர்க்கும் அண்டமாய (He is Ageless)

ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே

Audio



Lecture on this verse by Sri Krishna Premi Swamigal:



Translation:

Primacy of thine stands way above the ancient angels.
Premiere, thou art, even to the yonder dwellers.
Prescribe, thou doth, the terminus of the divines
Principal, thou remain, for long eons - who doth fathom thou?

பதம் பிரித்தது:

ஆதியான வானவர்க்கும் அண்டமாய அப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ
ஆதியான வான வாணர் அந்தி காலம் நீ உரைத்து
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே?

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)



In this verse the Azhwar says "ருத்ரனுக்கும் மட்டும் அல்ல உபய விபூதியில் எவராலும் முடியாது என்கிறார்"

ஆதியான வானவர்க்கும் - To the ancient angels 
ப்ரஹ்ம -தஷ பிரதாபதிகள் சப்த ரிஷிகள் த்வாதச ஆதித்யர்கள் ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் இந்திரன் சதுர் தச மனுக்கள் ஸ்திதி கர்த்தாக்கள் ருத்ரன் அக்நி, யமன் -சம்ஹார கர்த்தாக்கள் இவர்களை இத்தால் சொல்லிற்று
(and also to)

அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர் - the yonder dwellers - "Nithya Suris"
நித்ய சூரிகள் - அண்ட சப்த வாச்யமான லீலா விபூதிக்கு அப்புறத்தில் -பரம பதத்தில் -வர்த்திக்கிற ஜகத் காரண பூதரான நித்ய சூரிகளுக்கும் -அஸ்த்ர பூஷணாத்யாய க்ரமத்தாலே நித்ய சூரிகளை ஜகத் காரண பூதராக சொல்லக் கடவது இறே - அதவா  - "யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்திதேவ" -என்றும் "யத்ரர்ஷயஸ் ப்ரதம ஜாயே புராணா" - என்றும் சொல்லுகிற ஆதி தேவர்கள் என்றுமாம்

ஆதியான வாதி நீ - Premiere, thou art
அவர்களுக்கும் நிர்வாஹகனாய் - இப்படி உபய விபூதியிலும் ப்ரதானரான இவர்கள் உடைய சத்தாதிகளுக்கு ஹேதுவான ப்ரதானன் நீ - 

ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி - Prescribe, thou doth, the terminus of the divines - i.e. Thou determine the terminal age of even these divine creations
ஜகத்துக்கு கடவர்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளி செய்கிறாய்  - இனிமேல் ஜகத்துக்கு நிர்வாஹகமான கால தத்வமும் தேவரீர் இட்ட வழக்கு என்கிறது - ஜகத் ஸ்ர்ஷ்டியாதி கர்த்தாக்களாய் ஊர்த்தவ லோகங்களுக்கு அத்யஷராய் வர்த்திக்கிற ப்ரஹ்மாதிகள் உடைய பதங்களுடைய அவ்வவ காலத்துக்கு நியாமகனாய் நீ உரைத் தி – என்கிறது "சஹச்ர யுக பர்யந்தமஹர்யத் ப்ரஹ்மணோ விது" -என்று இத்யாதிகளிலே நீ அருளிச் செய்து இருக்கையாலே

ஆதியான கால நின்னை - Principal, thou remain, for long eons
ஆதி காலம் ஆன நின்னை -என்று மாற்றி ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை கார்ய ரூபமான ஜகத்தடைய சக்த்ய வஸ்த ப்ரபை போலே "லீநமாய் சதேவ சோம்யே தமக்ரே" -என்கிறபடியே ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை

யாவர் காண வல்லரே - who doth fathom thou - என்கிறார்
தாம்தாம் சத்தாதிகள் தேவரீர் இட்ட வழக்காய் இருந்த பின்பு தேவரீரை பரிச்சேதிக்க வல்லார் உண்டோ – -என்கிறார்

Transliteration:

AdhiyAna vAnavRkku maNdamAya vappuRaththu
AdhiyAna vAnavaRkkum AdhiyAna vAdhi nI
AdhiyAna vAnavANar anthikkAlam nIyuraiththi
AdhiyAna kAlaninnai yAvar kANa vallarE?

Monday, December 2, 2013

007. ஒன்றிரண்டு மூர்த்தியாய் (Another set of Trios)

ஒன்றிரண்டு மூர்த்தியா யுறக்கமோடு ணர்ச்சியாய்
ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய்
ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினானு முன்னையேத்த வல்லனே


பதம் பிரித்தது:

ஒன்றிரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஒன்றிரண்டு காலமாகி வேலை ஞால மாயினாய்
ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே


Transliteration:

ondRirandu mUrththiyA yurakkamOduNaRchchiyAy
ondRirandu kAlamAgi vElaignAlamAyinAy
ondRirandu theeyumAgi yAyanAya mAyanE
ondRirandu kaNNinAnu munnayEthta vallanE

Translation

Troika of Gods - thou exhibit as. Slumber and awakening, thou control
Trine parts of the day are ever thine - so are the ocean and the earth
Triple forms of fire only reveal thee - O! My deceptive cow-herd!
Tri-ocular Rudhra is, perhaps, the one qualified to praise thee!

விளக்கம்:
(Introduction to this from Sri Periavachaan Pillai - வியாக்யானம் - அவதாரிகை)


நாம் ஜ்ஞானத்துக்கு விஷயமான பின்பு பரிச்சேதித்து அறிய மாட்டாது ஒழிகிறது ஜ்ஞான சக்திகளின் குறையன்றோ -யாவர் காண வல்லரே -என்கிறது ஏன் என்ன - தேவரீர் இதர சஜாதீயராய் அவதரித்து ரஸிக்கிற படியை ஜ்ஞானத்தாலும் சக்தியாலும் அதிகனான ருத்ரனும் அறிய மாட்டான் -என்கிறார்.

ஓன்று இரண்டு மூர்த்தியாய் - Troika of Gods - thou exhibit as
ப்ரதானமான ஒரு மூர்த்தியும் அப்ரதானமான இரண்டு மூர்த்தியுமாய் ப்ரஹ்ம ருத்ராதிகளை சரீரமாகக் கொண்டு -அவர்களுக்கு நிர்வாஹனாய் - திவ்ய மங்கள விக்ரஹத்தை இதர சஜாதீயமாக ஆக்கிக் கொண்டு அவதரித்து பிரயோஜனாந்தர பரரோடு முமுஷுகளோடு வாசி யற சர்வ நிர்வாஹகனாய் -
"முனியே நான்முகனே முக்கண் அப்பா" - It is Lord Narayana manifests as Rudhra and Brahma - as these Jeevaas are also controlled by the the Supreme Lord by being their inner spirit. Thus the Lord, despite his superiority, manifests himself as these ordinary gods besides all other sentient beings.

உறக்கமோடு உணர்ச்சியாய் - Slumber and awakening, thou control
ஜ்ஞான அஞ்ஞானங்களுக்கு நிர்வாஹனாய் - அநாதி மாயயா ஸூப்தச் -என்கிறபடியே உறங்கினார் கணக்காய் விழுகையாலே உறக்கத்தை அஜ்ஞ்ஞானம் என்கிறது (1) அஞ்ஞானம் (2) அந்யதா ஞானம் (3) விபரீத ஞானம் (4) சம்சயம் (5) மறப்பு எல்லாம் உறக்கம் போலே தானே! இத்தால் மூன்றும் ஏகாத்மாதிஷ்டிதம் என்றும் -அநேகாத்மா திஷ்டிதம் என்றும் - அந்யோந்யம் சமர் என்றும் அஜ்ஞ்ஞானத்துக்கும் - மத்யஸ்தன் ரஷகன் - ப்ரஹ்ம ருத்ராதிகள் - ரக்ஷ்ய பூதர் என்கிற யாதாத்ம்ய ஜ்ஞானத்துக்கும் நிர்வாஹனாய் – என்கை

ஓன்று இரண்டு காலமாகி - Trine parts of the day are ever thine
ஞான ஹேதுவான சத்வோத்தர காலத்துக்கும் அந்யதா ஞான விபரீத ஜ்ஞானங்களுக்கு ஹேதுவான ரஜஸ் தமோத்ரிக்த கால த்ரவ்யத்துக்கும் நிர்வாஹகனாய் -"த்ரேதாயாம் ஜ்ஞானமுச்யதே -கலவ் ஜகத் பதிம் விஷ்ணும்" -என்னக் கடவது இறே. The vyakyaatha (Sri Periavachan Pillai) interprets the three types of "Time" as time belonging to the "Sathva GuNa", "RajO GuNa" and the "Taamasa GuNa" and the Lord is the master who controls these three types of "Time"

வேலை ஞாலமாயினாய் - so are the ocean and the earth
கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகனாய் -யாதாத்வஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு ஆவாஸஸ்தானமான கர்ம விபூதிக்கு நிர்வாஹகனாய் "அய்ந்து நவமஸ் தேஷாம் தீவபஸ் ஸாகர சம்வர்த்த" -என்கிறபடியே 

ஓன்று இரண்டு தீயுமாகி - Triple forms of fire only reveal thee
ஆகவநீயம் -கார்தபத்யம் -தஷிணாக்நி -என்ற மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹகனாய். According to the Vedas there are three types of Fire and He is the controller of all these three types of fires.

ஆயனாய மாயனே - O My deceptive cow-herd!
கோபால சஜாதீயனாய் அவதரித்த

ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே - Tri-ocular Rudhra is, perhaps, the one qualified to praise thee
ருத்ரனும் துதிக்க வல்லவன் அல்லன் -என்கிறார்

Monday, January 28, 2013

006. நாகமேந்து மேருவெற்பை (In loneliness HE supports all)


நாகமேந்து மேருவெற்பை நாகமேந்து மண்ணினை
நாகமேந்து மாகமாக மாகமேந்து வார்புனல்
மாகமேந்து மங்குல்தீயொர் வாயுவைந் தமைந்துகாத்து
ஏகமேந்தி நின்றநீர்மை நின்கணேயி யன்றதே

பதம் பிரித்தது:

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்தும்  ஆகம் ஆகி மாகம் ஏந்தும் வார்ப்புனல்
மாகம் ஏந்தும் அல்குல் தீ ஓர் வாயு ஐந்தும் அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே.


Transliteration:
nAgamEnthum mEruveRppai nAgamEnthum maNNinai
nAgamEnthum mAgamAgi mAgamEndhum vArppunal
mAgamEndhum algul theeyOr vAyuvainthumainthu kAththu
EgamEnthi nindra nIrmay inkaNE iyandrathE


Translation:
The mountain that holds the Heavens, the Tuskers that hold the Earth
the Fountain of Happiness, the Azure that holds the Rivers
the Firmament that holds the clouds, the fire and the winds – all these thou hold
in abandonment – Such grace belongs to Thou alone!

பாசுரம் உச்சரிப்பு: (Play பொத்தானை சொடுக்கவும்)



பதவுரை: (Explanation):


நாகம் ஏந்து மேரு வெற்பை
The shastras ascribe the ability to hold the heavens (நா அகம்) above to the brilliance arising from the peak of the Mount Meru
சாஸ்திரங்களின் படி சுவர்க்கத்தை மேரு பர்வதம் தாங்கி நிற்பதாக கூறப்படுகிறது. இந்த மேரு பர்வதத்தையும் ...
நாகம் ஏந்து மண்ணினை
In Sanskrit “Naahaa” can refer to a Snake or an Elephant – here it refers to Elephants – Dhikhgajas which hold the earth – according to shastras.
வடமொழியில் “நாஹா” என்பது யானையும் குறிக்குமாம். எனவே திக்கஜங்களால் தாங்கப்படுகின்ற இந்த பூமியையும் ...
நாகம் ஏந்தும்  ஆகம் ஆகி 
திருவனதாழ்வானால் தரிக்கப்படும் திருமேனியை உடையவனே  - Thou, whose body is supported by a Snake (Adiseshan)
Another Version of the above Line:
நாகமேந்தும் மாகம் ஆகி
(மற்றொரு நிர்வாஹம் - version)
மாகம் – பெரிய வீடு (அகம்) – VAIKUNDAM
கம் in Sanskrit means சுகம் happiness – அ கம் means துக்கம் sorrow - ந அகம் – means தூக்கமற்ற  (Devoid of any sorrow)
நாகமேந்தும் மாகம் – Vaikundam, which is devoid of any sorrow

துக்கமற்ற வைகுந்தத்தையும் ...
மாகம் ஏந்தும் வார்ப்புனல்
The Ganges which is borne by the Sky விண்ணிலிருந்து பாய்ந்து வரும் கங்கை நதியையும் ...
மாகம் ஏந்தும் அல்குல்
The clouds which are borne by the sky
விண்ணினால் தாங்கப்படும் மேகங்களையும் ---
தீ ஓர்
The Viashvaanaraagni – a kind of fire that supports the mankind
வைச்வாராக்நியையும் ....
வாயு ஐந்தும்
The five kinds of vital aira – Praana, Apana, Vyaana, Udhaana, Samaana – which support the human life
ஐவகை காற்றுக்களையும் ...
அமைந்து காத்து
Thou created all the above and support them too.
உருவாக்கி போஷித்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை
Thou create and support all the above in “SOLO” (abandonment) – this quality of yours …..
ஓராளாய் தாங்கி நிற்கும் உன் தன்மை..
நின்கணே இயன்றதே
Is seen to rest in Thee!
உன் பக்கலிலேயே உள்ளது.

The dictionary meaning of the word "நாகம்" can be seen here -http://goo.gl/xd4CI

Tuesday, September 18, 2012

005. நின்றியங்கும் ஒன்றல்ல (His nature is beyond comprehension)


நின்றியங்கு மொன்றலாவு ருக்கடோறும் ஆவியாய்
ஒன்றியுள்க லந்துநின்ற நின்னதன்மை யின்னதென்று
என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்நின் னுந்திவாய்
அன்றுநான்மு கற்பயந்த வாதிதேவ னல்லையே

பதம் பிரித்தது:

நின்று இயங்கும் ஒன்றல்ல உருக்கள்தொரும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறைந்த ஆதியாய் உன் உந்தி வாய்
அன்று நான்முகர் பயந்த ஆதி தேவன் அல்லையே?

பாசுரம் உச்சரிப்பு: (Play பொத்தானை சொடுக்கவும்)


Transliteration:

nindRiyangu mondralla urukkaLthOrum aaviyaay
ondriuL kalanthu nindra ninna thanmay innathendru
endrumyaarkkum eNNiraintha aathiyaayun unthivaay
andru naanmugaRp payantha aathithEvan allayyE?

Translation:


Neither the one who stays put nor the one who functions
A Pervading inner spirit -  a perplexing precursor- ever for all!
Primal Lord who once gave birth out of his navel 
the four-headed Lord of all creations!!

Recitation of the above verse: (click below)



பதவுரை: (Explanation):

நின்று
ஸ்தாவரமாயும் - stays put - (refers to inanimate / insentient objects)
இயங்கும்
ஜங்கமமாயுமிருக்கிற - functions - (refers to animate / sentient beings)
ஒன்று அலா ருக்கள் தோறும்
பலவகையான சரீரங்கள் தோறும் - all
ஆவி ஆய்
ஆத்மாவாய் - inner spirit
ஒன்றி உள் கலந்து நின்ற
பொருந்தி பரிஸமாப்ய வர்த்தியாநின்ற - pervading
நின்ன தன்மை இன்னது என்று
உன்னுடைய ஸ்வபாவம் இத்தகையதென்று - perplexing
என்றும்
எக்காலத்திலும் - ever
யார்க்கும்
எப்படிப்பட்ட ஞானிகட்கும் - For All
எண் இறந்த ஆதியாய்
சிந்திக்க முடியாதிருக்கிற ஆதிகாரணபூதனனான   எனம்பெருமானே! (நீ) - Precursor
அன்று
முற்காலத்திலே
நின் உந்திவாய்
உனது திருநாபியில் - out of his navel
நான் முகன்
சதுர்முகப்ரஹ்மாவை - Four-headed Lord of Creations
பயந்த
படைத்த - gave birth
ஆதிதேவன் அல்லையே
முழு முதற் கடவுளல்லையோர். - Primal Lord

Tuesday, August 28, 2012

004. மூன்று முப்பதாறினோடு (Medley of Threes)

மூன்றுமுப்ப தாறினோடொ ரைந்துமைந்து மைந்துமாய்
மூன்றுமூர்த்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்
ஏன்றெனாவி யுள்புகுந்த தென்கொலோவெம் மீசனே

பதம் பிரித்தது:

மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி ஆகி
மூன்று, மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்
ஏன்றென் ஆவியுள் புகுந்தது என்கொலோ எம் ஈசனே

Transliteration:

moondu muppth aarinodor ainthu mainthu mainthumaay
moondru moorthiyaagi moondu moondru moondrumaay
thOndru soothi moondrumaayth thuLakkamil viLakkamaay
Endre naaviyuL puguntha thenkolO vemmeesanE!

Translation:

A threesome and a score of trios enjoined by a triplet of penta – thou become!
Thou manifest as the Triad and as a quartet of trios,
and even as the triple spring lights or as the steady lamp.
How great! Thou entered my spirit!! O My Lord.
Explanation:
In view of the complicated medley of Digits given in this verse, I present the interpretations given by great teachers (vyakhyanakarthas) of the past:
Threesome (3) + a score of trios (12 * 3) + triplet of penta (5 *3 ) gives a total of 3+36+15=54. This number represents the 54 alphabets of Sanskrit Language which consists of 33 consonants 16 vowels and 5 special letters (which do not belong to the other categories).
Azhwar, who talked about the Lord as one who is the material cause of this world and cannot be understood except through ‘vedantha’ the later part of the vedas in the first verse, answered the question as to how the devotees can attain him, in the second verse, enumerating the organs, actions and devotions needed to achieve that and implied that even these are also controlled only by the Lord.
Therefore, in the third verse, he implicitly explained that the Lord is so mysterious that even the above stated actions and devotions cannot on their own effort reveal the Lord unless the Lord himself wills to reveal himself to the devotee on account of his unconditional grace. (யாவர் காண வல்லரே?)
In this verse, Azhwar, states that the Lord has entered into his spirit and wonders how and why he has done so when he did not worship him through the Vedas which are made up of alphabets, which only manifest him. (ஏன்றென் ஆவியுள் புகுந்தது என்கொலோ) This explains why the number 54 is brought forth here – this represents the alphabets which in turn culminate in the vedas, which manifest the Lord.
The Triad (மூன்று மூர்த்தி) represents the three categories of the Alphabets – Consonants, Vowels and the Special Letters. The quartet of trios (4 *3=12) – (மூன்றுமூன்றுமூன்று மூன்றுமாய்) twelve alphabets are the Sanskrit alphabets that compose the Thirumandhiram – “Om Namo Narayanayah’ – which is revered to represent the Lord.
The triple Spring (தோன்று) Lights are the three separate phonemes ‘a’, ‘u’ ‘m’ which together form the pranavam (‘OM’) sound. The steady (துளக்கமில்) Lamp (விளக்கமாய்) is the akshara ‘a’ which is said to represent the Lord himself as the premier alphabet.