Wednesday, December 4, 2013

009. தாதுலாவு கொன்றை மாலை - (Virtuous to the self indulgent as well as the scholars)

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாயசீர்
வேதவாணர் கீதவேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே

Audio:




Upanyasam by Sri Krishna Premi Anna on this verse:



Translation:

Entwined dark crown worn Shiva with nectar full garland of cassia
Entreat on thy feet with the vedic chants - such are thy Virtues and Fairness!
Enlightened scholars of vedic virtues
Enthrall thee with vedic verses - such are thy Virtues and Fairness!

பதம் பிரித்தது:

தாது உலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நிர்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே

விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)

Introduction: இப்படி அபரிச்சேத்ய வைபவன் ஆகையாலே பிரயோஜனாந்த பரரில் அக்ர கண்யனான ருத்ரனனும் -வைதிக அக்ரேசரராய் -அநந்ய பிரயோஜனரான சாத்விக ஜனங்களும் உன்னையே ஆஸ்ரயிக்கையாலே சர்வ சமாஸ்ரயணீ யானும் நீயே என்கிறார் –

வியாக்யானம் -

தாதுலாவித்யாதி - (தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்): Entwined dark crown worn Shiva with nectar full garland of cassia
தாது மிக்க கொன்றை மாலை என்ன -நெருங்கி சிவந்த ஜடை என்ன -இவற்றை உடைய ருத்ரன் கொன்றை மாலையைச் சொல்லுகையாலே -போக ப்ரதானன் என்றும் (he is a connoisure of all pleasures as he wears a Nectar full garland of cassia flowers) - தீர்க்கத பாவாகையாலே செறிந்து ஸ்தான பாஹூள்யத்தாலே சிவந்து இருக்கிற ஜடையை உடையான் ஆகையாலே -அந்த போகம் தான் சாதித்து லபித்தது என்றும் சொல்லுகிறது - இத்தால் -போகமே புருஷார்த்தம் -அது தானே ஈஸ்வரனை ஆஸ்ரயித்து பெற வேணும் என்கிறது

நீதியால் வணங்கு பாத - Entreat on thy feet with the vedic chants
தேவரீரை ஐஸ்வர்ய விசிஷ்டனாக ஆஸ்ரயிக்க சொல்லுகிற வேதோக்த ப்ரகாரத்தாலே அவன் உபாசிக்கிற திருவடிகளை உடையவனே

நின்மலா - "The Fair One" - since HE does not distinguish between the learned selfless scholars and the Shiva who only seeks pleasures
பிரயோஜனாந்தரங்களை அபேஷிக்கிறது -ஈச்வரோஹம் -என்று இருக்கிற துர்மானி ஆஸ்ரயித்தான் என்று -இத் தோஷங்களை நினையாதே -நம் பக்கலிலே சாபேஷனாய் வந்தான் என்கிற குணத்தையே நினைத்து -அநந்ய பிரயோஜநருக்கு முகம் கொடுக்குமா போலே முகம் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே - இப்படி விஷயீ கரித்து அவனுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் ஏது என்னில் மஹா தேவஸ் சர்வ மேதே மஹாத்மா ஹூத் வாத்மானம் தேவ தேவோ பபூவ - என்கிறபடியே தேவ தேவத்வத்தை கொடுத்தவனே - இது பிரயோஜநாந்தர பரர் எல்லாருக்கும் உப லஷணம்

நிலாயா சீர் - "virtues"
வர்த்திக்கிற குணங்கள் - அதாகிறது ஞான சாதனமான அமாநித்வாத் யாத்மகுணங்களாலும்
உபாசன அங்கமான சம தமாதி குணங்களாலும் சம்பன்னராய் இருக்கை அங்கன் அன்றியே -
நிலாய சீர் வேதம் -என்று வேத விசேஷணமாய் -நித்யத்வா -அபௌருஷேயத்வ நிர் தோஷத்வங்களாலே - காரண தோஷ பாதக ப்ரத்யயாதி தோஷ ரஹித கல்யாண குணங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

வேத வாணர் - Enlightened scholars of vedic virtues
வேதங்களுக்கு நிர்வஹகர் என்னலாம் படி வேதார்த்தத்தை கரை கண்டவர்

கீத வேள்வி - Enthrall with vedic verses
அந்த வேதார்த்த அனுஷ்டானமாய் சாம கான பிரதானமான யாகங்களிலே ப்ரவர்த்தர் ஆனவர்கள் அதாவது -ஆத்ம யாதாம்ய ஞான பூர்வகமாக த்ரிவித பரித்யாக உக்தராய் பகவத் சமாராதான புத்தியாலே அனுஷ்டிக்கும் யஞ்ஞங்கள்

நீதியான கேள்வியார் - scholars of vedic virtues
க்ரமப்படி ஸ்ரவண மனனங்களை செய்பவர்கள் - உக்தமான வேதார்த்த தாத்பர்யம் கைப்படுகைக்கும் தத் கார்யமான கர்ம யோகாத்யா அனுஷ்டானங்களுக்கும் அடியான கேள்வியை உடையவர்கள் - நீதியான கேள்வி யாகிறது -ப்ரீஷ்ய லோகான் -இத்யாதியில் சொல்லுகிறபடியே நிர் வேதா வ்ர்த்தி பிறந்து ப்ரஹ்ம நிஷ்டரான ஆசார்யன் பக்கலில் உபசன்னராய் "ச்ரோதவ்யோ மந்தவ்ய" -என்கிறபடியே சரவண மனனங்களை பண்ணுகை

நீதியால் வணங்குகின்ற நீர்மை - Enthrall thee with vedic verses 
"நிதித்யாஸிதவ்ய" -என்கிறபடியே கர்ம அங்கமான அநவரத பாவனை பண்ணுகைக்கு
உபாச்யனாய் நிற்கிற ஸ்வபாவம்

நின் கண் நின்றதே - such are thy virtues
உன் பக்கலிலே வர்த்திக்கிறது இத்தனை - அவதாரணத்தாலே வேறு ஆஸ்ரயணீயர் இல்லை -என்கிறார்

No comments:

Post a Comment