Monday, December 2, 2013

007. ஒன்றிரண்டு மூர்த்தியாய் (Another set of Trios)

ஒன்றிரண்டு மூர்த்தியா யுறக்கமோடு ணர்ச்சியாய்
ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய்
ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினானு முன்னையேத்த வல்லனே


பதம் பிரித்தது:

ஒன்றிரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஒன்றிரண்டு காலமாகி வேலை ஞால மாயினாய்
ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே


Transliteration:

ondRirandu mUrththiyA yurakkamOduNaRchchiyAy
ondRirandu kAlamAgi vElaignAlamAyinAy
ondRirandu theeyumAgi yAyanAya mAyanE
ondRirandu kaNNinAnu munnayEthta vallanE

Translation

Troika of Gods - thou exhibit as. Slumber and awakening, thou control
Trine parts of the day are ever thine - so are the ocean and the earth
Triple forms of fire only reveal thee - O! My deceptive cow-herd!
Tri-ocular Rudhra is, perhaps, the one qualified to praise thee!

விளக்கம்:
(Introduction to this from Sri Periavachaan Pillai - வியாக்யானம் - அவதாரிகை)


நாம் ஜ்ஞானத்துக்கு விஷயமான பின்பு பரிச்சேதித்து அறிய மாட்டாது ஒழிகிறது ஜ்ஞான சக்திகளின் குறையன்றோ -யாவர் காண வல்லரே -என்கிறது ஏன் என்னதேவரீர் இதர சஜாதீயராய் அவதரித்து ரஸிக்கிற படியை ஜ்ஞானத்தாலும் சக்தியாலும் அதிகனான ருத்ரனும் அறிய மாட்டான் -என்கிறார்.

ஓன்று இரண்டு மூர்த்தியாய் - Troika of Gods - thou exhibit as
ப்ரதானமான ஒரு மூர்த்தியும் அப்ரதானமான இரண்டு மூர்த்தியுமாய் ப்ரஹ்ம ருத்ராதிகளை சரீரமாகக் கொண்டு -அவர்களுக்கு நிர்வாஹனாய்திவ்ய மங்கள விக்ரஹத்தை இதர சஜாதீயமாக ஆக்கிக் கொண்டு அவதரித்து பிரயோஜனாந்தர பரரோடு முமுஷுகளோடு வாசி யற சர்வ நிர்வாஹகனாய் -
"முனியே நான்முகனே முக்கண் அப்பா" - It is Lord Narayana manifests as Rudhra and Brahma - as these Jeevaas are also controlled by the the Supreme Lord by being their inner spirit. Thus the Lord, despite his superiority, manifests himself as these ordinary gods besides all other sentient beings.

உறக்கமோடு உணர்ச்சியாய் - Slumber and awakening, thou control
ஜ்ஞான அஞ்ஞானங்களுக்கு நிர்வாஹனாய்அநாதி மாயயா ஸூப்தச் -என்கிறபடியே உறங்கினார் கணக்காய் விழுகையாலே உறக்கத்தை அஜ்ஞ்ஞானம் என்கிறது (1) அஞ்ஞானம் (2) அந்யதா ஞானம் (3) விபரீத ஞானம் (4) சம்சயம் (5) மறப்பு எல்லாம் உறக்கம் போலே தானே! இத்தால் மூன்றும் ஏகாத்மாதிஷ்டிதம் என்றும் -அநேகாத்மா திஷ்டிதம் என்றும்அந்யோந்யம் சமர் என்றும் அஜ்ஞ்ஞானத்துக்கும்மத்யஸ்தன் ரஷகன்ப்ரஹ்ம ருத்ராதிகள் - ரக்ஷ்ய பூதர் என்கிற யாதாத்ம்ய ஜ்ஞானத்துக்கும் நிர்வாஹனாய்என்கை

ஓன்று இரண்டு காலமாகிTrine parts of the day are ever thine
ஞான ஹேதுவான சத்வோத்தர காலத்துக்கும் அந்யதா ஞான விபரீத ஜ்ஞானங்களுக்கு ஹேதுவான ரஜஸ் தமோத்ரிக்த கால த்ரவ்யத்துக்கும் நிர்வாஹகனாய் -"த்ரேதாயாம் ஜ்ஞானமுச்யதே -கலவ் ஜகத் பதிம் விஷ்ணும்" -என்னக் கடவது இறே. The vyakyaatha (Sri Periavachan Pillai) interprets the three types of "Time" as time belonging to the "Sathva GuNa", "RajO GuNa" and the "Taamasa GuNa" and the Lord is the master who controls these three types of "Time"

வேலை ஞாலமாயினாய்so are the ocean and the earth
கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகனாய் -யாதாத்வஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு ஆவாஸஸ்தானமான கர்ம விபூதிக்கு நிர்வாஹகனாய் "அய்ந்து நவமஸ் தேஷாம் தீவபஸ் ஸாகர சம்வர்த்த" -என்கிறபடியே 

ஓன்று இரண்டு தீயுமாகி - Triple forms of fire only reveal thee
ஆகவநீயம் -கார்தபத்யம் -தஷிணாக்நி -என்ற மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹகனாய். According to the Vedas there are three types of Fire and He is the controller of all these three types of fires.

ஆயனாய மாயனே - O My deceptive cow-herd!
கோபால சஜாதீயனாய் அவதரித்த

ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே - Tri-ocular Rudhra is, perhaps, the one qualified to praise thee
ருத்ரனும் துதிக்க வல்லவன் அல்லன் -என்கிறார்

No comments:

Post a Comment